மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரை அருகே மேலூரில் அதிமுக- அமமுக மோதலால் பரபரப்பு

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை அருகே மேலூரில் அதிமுக - அமமுக மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் ஆங்காங்கே வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. ஆனால் மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு பதிலாக இரவு 8 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைகிறது.

 ADMK and AMMK clash in Madurai

இந்த நிலையில் இறுதி கட்ட பிரச்சாரங்கள் நேற்று முன் தினத்துடன் முடிவடைந்துள்ள நிலையில் வாக்குச் சாவடியில் யாரும் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பது விதி. ஆனால் மதுரை அருகே மேலூரில் திருவாதவூரில் வரிசையில் வாக்களிக்க மக்கள் காத்திருந்தனர்.

கருணாநிதி மறைவுக்கு பிறகு முதல் தேர்தல்.. வீல்சேரில் வந்து வாக்களித்தார் தயாளு அம்மாள் கருணாநிதி மறைவுக்கு பிறகு முதல் தேர்தல்.. வீல்சேரில் வந்து வாக்களித்தார் தயாளு அம்மாள்

அப்போது அங்கு வந்த அதிமுகவினர் அவர்களிடம் வாக்குச் சேகரித்தனர். இதை அமமுகவினர் தட்டி கேட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

பின்னர் மோதலும் நடைபெற்றது. இதையடுத்து தென் மண்டல் காவல் துறை துணை தலைவர் பிரதீப் குமார் விசாரணை நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
ADMK and AMMK clash in Madurai after doing campaign in polling Station.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X