மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ

Google Oneindia Tamil News

Recommended Video

    சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக

    மதுரை:இந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி இந்த ஆட்சிதான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மதுரையில் குடிநீர் பிரச்சனை வரக் கூடாது என்பதற்காக 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் லோயர்கேம்பில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் பணிகள் 3 கட்டமாக நடைபெற்று வருகின்றது.

    ADMK govt is maintaining law and order neatly: Minister Sellur Raju

    நீர் நிலைகளில் குடி மரமத்துப் பணிகளை மேற்கொள்ள 2016ஆம் ஆண்டு நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா தான். மதுரையில் மாடக்குளம், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகள் பராமரிக்கும் வழிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    ஒரே ஒரு டிவீட்.. ஓயாமல் உழைத்த தொண்டர்கள்... 480 யூனிட் ரத்தம் சேகரித்து அசத்திய நாம் தமிழர் கட்சி ஒரே ஒரு டிவீட்.. ஓயாமல் உழைத்த தொண்டர்கள்... 480 யூனிட் ரத்தம் சேகரித்து அசத்திய நாம் தமிழர் கட்சி

    தற்போது 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் தான் கிராமத்தில் கூட தங்கு தடையின்றி குடிநீர் கிடைத்து வருகின்றது.

    மதுரை மாவட்டத்தில் மீண்டும் தீண்டாமை வன்கொடுமை ஏற்படுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ எந்த மாதிரியான பிரச்சனைக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்ட ஒழுங்கைப் பேணி காத்து வருகிறார்.

    இந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி இந்த ஆட்சி தான், சட்ட ஒழுங்கு சிறப்பாக செயல்படுகிறது இந்த ஆட்சியில்தான் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மேலும் துறை ரீதியான கேள்விகள் மட்டுமே தன்னிடம் கேட்கலாம் என்றும் என்றும் அமைச்சர் கூறினார்.

    English summary
    Minister Sellur Raju has said ADMK govt is maintaining law and order neatly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X