மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

23-ம் தேதிக்கு பின் எதிர்கட்சிகள் எல்லாம் காகித ஓடம் தான் .. அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி -வீடியோ

    மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட விளாச்சேரி பகுதியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர், கோட்சே குறித்து கமல் கூறிய கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்.

    எம்ஜிஆர் அவர்களின் படங்களிலும் கண்ணியம் கோட்பாடு என அனைத்தும் இருந்தது. அதே போல் அரசியலும் இருந்தது. ஆனால் கமலைப் பொறுத்தவரை திரைப்படத்திலும் கண்ணியம் இல்லை அரசியலும் இல்லை.

    After 23rd, all the opposition parties are in the paper Barges .. Minister Jayakumar interviewed

    அதிமுக என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று. திமுக கூட்டணி என்பது காகித ஓடம். வரும் 23ம் தேதி காங்கிரஸ், திமுக,அமமுக, காகித ஓடம் நிலைமைக்கு வரும். அதே போல ரஜினிகாந்த் வேண்டாத மனிதர் அல்ல. எல்லோருக்கும் வேண்டியவர்தான் அதிமுகவிற்கு அவர் வந்தால் நல்லது.

    முகவிற்கு கொள்கை இலட்சியம் தொலைநோக்குப் பார்வை என எதுவும் கிடையாது. ஸ்டாலின் ஒரு கணக்கு வாத்தியாராக மாறியிருக்கிறார். ஸ்டாலினுக்கு கழித்தல் தெரியாது. 23-ம் தேதிக்கு பின் அவர் கற்று கொள்வார். அதிமுக அரசை திமுக கலைக்க நினைப்பது இயல்பானது. ஆனால் டிடிவி தினகரனும் அதையே நினைப்பது பச்சை துரோகமாகும். யாராலும் தொட்டுப் பார்க்கக் கூட முடியாத மாபெரும் இயக்கம் அதிமுக.

    தீவிரவாதிக்கு மதச்சாயம் பூசாமல் இருப்பதே நல்லது.. கமலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அட்வைஸ்!தீவிரவாதிக்கு மதச்சாயம் பூசாமல் இருப்பதே நல்லது.. கமலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அட்வைஸ்!

    இக்கட்சியிலிருந்து வெளியே போனவர்கள் எல்லாம் அழிந்து போனவர்களாக தான் இருக்கிறார்கள். தேர்தலுக்கு பின் அமமுக இருக்காது. அதிமுகவின் உண்மை தொண்டராக இருந்தால் அமமுக வில் இருந்து அதிமுகவிற்கு மீண்டும் திரும்புவார்கள். அமமுக ஒரு லெட்டர் பேடு கட்சி என விமர்சித்தார்.

    வாக்கு சேகரிக்க அனைத்து தொகுதிகளுக்கும் தினமும் செல்லும் தினகரன், வெற்றி பெற்ற பின் ஆர்கே நகர் தொகுதிக்கு சென்று மக்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறாரா கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார் கலைஞரால் அது முடிந்ததா? என வினவினார் கருணாநிதியாலேயே முடியாத ஒரு விஷயத்தை ஸ்டாலினால் எப்படி செய்ய முடியும் என்றார்.

    7 தமிழர் விடுதலை விவகாரத்தில் சட்டமன்றத்தின் மூலம் ஒரு தீர்மானம் ஏற்படுத்தி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்விகாரத்தில் தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுத்து வருகிறோம் இந்த விசயத்தை பொருத்தமட்டில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூநினார்.

    English summary
    The Minister Jayakumar met the reporters in Vadchery area in Tiruparankundam constituency and said, "Kamal's comment on Godse is unacceptable.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X