மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உசிலம்பட்டியில் சூப்பர் .. வலை வீசி வெட்டுக்கிளியைப் பிடிக்கும் வேளாண் அதிகாரிகள்.. செம கலகல!

Google Oneindia Tamil News

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே வேளாண்மை துறையினர் வெட்டுக்கிளியை வலைபோட்டு பிடிக்கும் சம்பவம் காமெடி சம்பவமாக மாறியுள்ளது.

Recommended Video

    உசிலம்பட்டியில் சூப்பர்.. வலை வீசி வெட்டுக்கிளியை பிடிக்கும் அதிகாரிகள் - வீடியோ

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தில் சரவணன் என்பவரின் தோட்டத்தில் கால்நடை தீவனப் புல்லில் வெட்டுக்கிளி படையெடுத்தது. அதனைதொடர்ந்து அருகில் பயிரிட்டிருந்த சோளப்பயிரில் தாவிய வெட்டுகிளிகள் சுமார் அரை ஏக்கர் (50சென்ட்) பயிர்களை சேதப்படுத்தியது.

    இந்நிலையில் அமைச்சர் உதயகுமார், தலைமையில் வேளாண்மை துறை அதிகாரிகள் வெட்டுக்கிளி குறித்து ஆய்வு மேற்கொண்டு, இது லோகஸ்ட் ரக வெளிநாட்டு வெட்டுக்கிளி அல்ல எனவும், இந்த வெட்டுக்கிளி விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

    இஸ்ரேல் நோக்கி வந்த 12 ஏவுகணைகள்.. பதிலுக்கு போர் ஜெட்களை அனுப்பிய நெதன்யாகு.. பற்றி எரியும் காஸாஇஸ்ரேல் நோக்கி வந்த 12 ஏவுகணைகள்.. பதிலுக்கு போர் ஜெட்களை அனுப்பிய நெதன்யாகு.. பற்றி எரியும் காஸா

    வேளாண்துறை

    வேளாண்துறை

    இந்நிலையில் உசிலம்பட்டி வேளாண்மைதுறை அதிகாரி புவனேந்திரன் தலைமையிலான குழுவினர் கொசுவலையை எடுத்து சென்று, பயிரில் சுற்றி திரிந்த வெட்டுக்கிளிகளை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் வெட்டுக்கிளி யாருடைய விரட்டுக்கும் பயப்படாமல் இடம்மாறி சென்று கொண்டே இருந்தது.

    கொசு வலை

    கொசு வலை

    ஆ ஊ என சத்தம் போட்டுக் கொண்டே (அப்போதுதான் வெட்டுக்கிளி மாட்டுமாம்) சுமார் 5மணி நேரம் போராடி வெட்டுகிளிகளை கொசுவலைக்குள் பிடிக்க முடியாமல் திணறினர். கடைசியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வெட்டுக்கிளிகளை பிடித்து போரில் வெற்றி பெற்ற மாவீரனைப் போல் பெருமிதத்துடன் சென்றனர்.

    தெர்மாகோல்

    தெர்மாகோல்

    வெட்டுக்கிளிகள் அதிகம் தென்பட்டால் இதே போல் கொசுவலையைப் போட்டு பிடிக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட விவசாயிக்கு அறிவுரையும் கூறிச் சென்றனர். இந்த சம்பவத்தை பார்த்த கிராம மக்கள் ஆண்டிபட்டி வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் ஷீட்டை தண்ணீரில் மிதக்க விட்ட சம்பவத்துடன் ஒப்பிட்டு சிரித்துக் கொண்டனர்.

    விவசாய பயிர்கள்

    விவசாய பயிர்கள்

    ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு வரும் வெட்டிக்கிளிள் அங்கு பயிர்களை சேதப்படுத்திய பிறகு நேராக இந்தியாவுக்குள் நுழைகின்றன. இங்கு ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. இந்த ரக வெட்டுக்கிளிகள் லோகஸ்ட் என அழைக்கப்படுகிறது.

    English summary
    Agriculture Department tries to catch the grasshoppers using a net in Usilampatti which gives laugh like thermocol strategy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X