மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவில் வெடித்தது கோஷ்டி பூசல்.. ஒற்றை தலைமை தேவை.. எம்எல்ஏ ராஜன் செல்லப்பா போர்க்கொடி

Google Oneindia Tamil News

Recommended Video

    MLA Rajan chellappa: அதிமுகவில் வெடித்தது கோஷ்டி பூசல்..எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா போர்க்கொடி- வீடியோ

    மதுரை: அதிமுகவுக்கு வலிமையான ஒற்றை தலைமை தேவை என்று, மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பரபரப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரையில் இன்று அவர் நிருபர்களிடம் இப்படி ஒரு பரபரப்பு பேட்டியை அளித்தார். அதில் அவர் கூறியதாவது: இரட்டை தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    AIADMK need single captaincy: Rajan chellappa

    ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது இல்லை. எனவே ஆளுமைமிக்க தலைமையை உருவாக்க வேண்டும். அதிமுகவில் யாரிடம் இப்போது அதிகாரம் இருக்கிறது என்றே தெரியவில்லை. எனவே விரைவில் அதிமுக செயற்குழு, மற்றும் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தை கூட்டி ஒற்றை தலைமை குறித்து ஆலோசிக்க வேண்டும்.

    ஜெயலலிதாவால் அங்கீகாரம் கொடுக்கப்பட்டவர்தான், தலைமைப் பதவியில் இருக்க வேண்டும். அது யார் என்பதை பொதுக்குழுவில் ஆலோசிக்க வேண்டும். இப்போது தலைமையில் உள்ள இருவருமே ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் தான் என்றாலும், அவர்களில் யார் சிறந்தவர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.

    அல்லது இதைவிட சிறப்பானவர்கள், இருந்தாலும் அவர்களை பொதுச்செயலாளராக நியமிக்கலாம். நான் சொல்லும் கருத்துக்கள், கட்சியின் பிரச்சினை கிடையாது. சில இடர்பாடுகள் அதிமுகவை பலவீனப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த கருத்தை சொல்கிறேன். அதிமுகவிலுள்ள, சின்ன, சின்ன நெருடல்களால் திமுக பலன் பெற முடியாது எந்த ஒரு அதிமுக திமுகவுக்கு செல்ல மாட்டார்கள்.

    ஜெயலலிதா பாணியில் மோடி.. குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி ஜெயலலிதா பாணியில் மோடி.. குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி

    தினகரன் செல்வாக்கு என்பது ஒரு மாயை என்பது நடந்து முடிந்த தேர்தலில் உறுதியாகிவிட்டது. தேனி தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரவீந்திரநாத் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ஆனால், இடைத் தேர்தல்களில் வெற்றிபெற்ற 9 அதிமுக எம்எல்ஏக்கள் இதுவரை ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை. அவர்களை தடுப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஆட்சியை காப்பாற்றக் கூடிய வகையில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றும் கூட, ஜெயலலிதாவுக்கு அந்த வெற்றியை காணிக்கையாக செலுத்தாதது, ஏன் என்ற கேள்வி எழுகிறது. ரவீந்திரநாத் உடனேயே 9 எம்எல்ஏக்களும், ஜெயலலிதா நினைவிடம், சென்றிருக்க வேண்டும். இவ்வாறு ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.

    English summary
    AIADMK need single captaincy, as we need a powerful leader for this party, says AIADMK Madurai North MLA Rajan chellappa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X