மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவிரிப் பிரச்சினையில் என்ன செய்தது திமுக.. எல்லாம் செய்தது ஜெ.தான்.. ஓபிஎஸ் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரிப் பிரச்சினையில் என்ன செய்தது திமுக..ஓபிஎஸ் அதிரடி கேள்வி-வீடியோ

    மதுரை: தமிழகத்திற்கு நிறைய நல்லது செய்தவர் ஜெயலலிதாதான். எனவே தமிழகம், புதுச்சேரியில் 40 லோக்சபா தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

    மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:

    AIADMK will win in all 40 seats, OPS asserts

    நாடாளுமன்றத்தில் இரண்டு பெரிய கட்சிகள் போட்டியிடுகின்றன. ஒன்று பாஜக அதிமுக கூட்டணி. மற்றொன்று திமுக காங்கிரஸ் கூட்டணி. ஏற்கனவே காங்கிரஸ் திமுக நாடாளுமன்ற அரசியல் செயல்பாடு அவர்கள் கையாண்ட விதம் தமிழகத்தில் பல்வேறு ஜீவாதார உரிமைகள் பறிபோகும் என்ற சூழ்நிலை ஏற்படும்போது அதை தடுத்து நிறுத்தும் செயல்களில் ஈடுபடவில்லை.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பொறுப்பில் இல்லாத நேரத்திலும் நம்முடைய ஜீவாதார உரிமைகளை பெற்றுத் தருவதில் ஒரு தலைசிறந்த முதலமைச்சராக தலைசிறந்த அரசியல் இயக்கத்தின் தலைவராக விளங்கினார் என்பது நாமெல்லாம் பெற்றிருக்கிறோம்.

    AIADMK will win in all 40 seats, OPS asserts

    ஆகவே இந்த இரு அணிகள் உடைய செயல் சீர்தூக்கிப் பார்த்து தராசில் நிறுத்தி வைத்து எடை போட்டுப் பார்த்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தமிழர்களுடைய ஜீவாதார உரிமைகளை பறிக்கும் என்று பொழுது அதை தடுத்து நிறுத்துவது சக்தியாக விளங்கி இருக்கும் செய்யப்பட்டு இருக்கிறது என்றெல்லாம் நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். ஆகவே அனைத்திந்திய அண்ணா திராவிட புதுச்சேரி உள்பட 39 தமிழகத்தில் இருக்கின்ற 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும்.

    தேனி நாடாளுமன்றத்தை பொறுத்தவரையில் அது அதிமுக எஃகு கோட்டை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட தமிழகத்தில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே தொகுதி தேனி தொகுதி எனவே அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும் கழகத்தின் வேட்பாளரான ரவிந்திரநாத் மிகப்பெரிய வெற்றி பெறுவார்.

    டி ஆர் பாலு ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர்: மீண்டும் வெற்றி வசமாகுமா? டி ஆர் பாலு ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர்: மீண்டும் வெற்றி வசமாகுமா?

    காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்தும் அதற்கு அரசாணை பெற்றுத்தர முடியாத அரசாகத்தான் அன்றைய திமுக - காங்கிரஸ் அரசு இருந்தது.

    AIADMK will win in all 40 seats, OPS asserts

    ஏழு ஆண்டுகள் ஸ்டாலினால் ஒன்றும் பெற்றுத்தர முடியவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக உச்சநீதிமன்றம் எடுத்துச் சென்று வாதாடி போராடி சட்டப்போராட்டம் நடத்தி, ஜெயலலிதா அவர்களால் தான் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் பிரசுரிக்க முடிந்தது என்றார் அவர்.

    English summary
    Deputy CM O Panneerselvam has asserted that AIADMK and its alliance parties will win all 40 seats in TN and Puducherry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X