மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீறிப் பாயும் காளைகள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை இணைந்து துவக்கி வைத்த எடப்பாடியார், ஓபிஎஸ்

Google Oneindia Tamil News

மதுரை: உலக புகழ் பெற்ற, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர்.

Recommended Video

    சீறிப் பாயும் காளைகள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை இணைந்து துவக்கி வைத்த எடப்பாடியார், ஓபிஎஸ் - வீடியோ

    பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    Alanganallur Jallikattu inaugurated today

    இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்றது. நேற்று 15ம் தேதி மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

    இன்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    Alanganallur Jallikattu inaugurated today

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுகளும் 650 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றுள்ளனர். அலங்காநல்லூரில் முனியாண்டி கோவில் காளைக்கு எடப்பாடியார் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர். உறுதிமொழிக்கு பிறகு, ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதன்பிறகு, வாடிவாசலில் இருந்து முதலில், கோவில் காளை சீறிப்பாய்ந்தது.

    Alanganallur Jallikattu inaugurated today

    சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chief Minister Edappadi Palaniswami and Deputy Chief Minister O. Panneer Selvam today inaugurated the world famous Alanganallur Jallikattu competition.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X