மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 2 சிறப்பு பரிசு அளிக்கும் முதல்வர், துணை முதல்வர்.. என்ன தெரியுமா?

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கும், சிறந்த வீரருக்கும் கார் பரிசு அளிக்க போவதாக தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முதல்வர் கொடுக்கும் பரிசு இது தான்

    மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கும், சிறந்த வீரருக்கும் கார் பரிசு அளிக்க போவதாக தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர்.

    மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8 முதல் மாலை 4 வரை நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டில் 1400 காளைகள் சீறிப்பாய்கின்றன. இதில் 848 மாடுபிடிவீரர்கள் பங்கேற்கின்றனர்.

    Alanganallur Jallikattu: TN CM and Deputy CM will give a special prize today evening

    இந்த விழாவில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு பல சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எல்லா வருடமும் இந்த போட்டியில் வழங்கப்பட்டு வரும் பரிசுகள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

    ஒரு காலத்தில் வெறும் பாத்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இப்போதெல்லாம், கார், பைக், ஏசி என்று மிகவும் விலை அதிகமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தற்போது இந்த விழாவில் வெற்றிபெறும் இரண்டு பேருக்கு தமிழக முதல்வரும், துணை முதல்வரும் பரிசு வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்கள். இருவரும் கார் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஒரு காரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வர் எடப்பாடி சார்பில் ஒரு காரும் வழங்கப்படவுள்ளது. இன்று மாலை நடக்கும் விழாவில் இதற்கான பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    English summary
    Alanganallur Jallikattu: TN CM and Deputy CM will give a special prize today evening at the end of the show.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X