மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அங்க என்ன பிடிப்போ.. அதே பிடிப்புதான் இங்கேயும்.. செல்லூர் ராஜு செம பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    கூட்டணி குறித்து செல்லூர் ராஜு செம பேச்சு

    மதுரை: தேர்தல் கூட்டணி என்பது வேறு, கொள்கை கூட்டணி என்பது வேறு என அமைச்சர் செல்லூர் ராஜு வித்தியாசமாக விளக்கியுள்ளார்.

    மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள நவீன மயமாக்கப்பட்ட மதுரை செளராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கேர்.ராஜு திறந்து வைத்தார்.

    alliance and policy are different says sellur raju

    நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி முடிவானதை அடுத்து நிகழ்ச்சியில் அதிமுக - பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானவர்கள் பங்கேற்பு செய்தனர். விழாவில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசுகையில் கூட்டணி குறித்துப் பேசினார். அவரது பேச்சிலிருந்து...

    எம்.ஜி ஆர் இல்லையென்றால் அரசியலில் யாரும் இருக்க முடியாது. எம்.ஜி.ஆரின் குணங்கள் எனக்குள் உண்டு. நாங்கள் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா பாசறையில் வளர்ந்த பிள்ளைகள். நான் இந்த அளவிற்கு உயர காரணம் ஜெயலலிதா போட்ட பிச்சை.

    alliance and policy are different says sellur raju

    மக்களிடையே எம்.ஜி.ஆர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அதற்கு டி.எம்.எஸ் குரல் தான் காரணம். அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் 100 ஆண்டு காலத்திற்கு நிலைத்து நிற்கும். எம்.ஜி.ஆர் படத்தை 100 நாட்கள் ஒட வைக்க தொண்டர்கள் சுண்டல் விற்று டிக்கெட் வாங்கி படத்தை ஒட வைத்து உள்ளனர்.

    பெரிய பணக்காரர், பெரிய பதவியில் உள்ளவர்களை நம்பி அதிமுக இல்லை. சாதாரண தொண்டணை நம்பி தான் அதிமுக உள்ளது. தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மறுவாழ்வு பெற காரணமாக இருந்தவர் ஜெயலலிதா. தமிழகத்தில் உள்ள 93 சதவீத கூட்டுறவு வங்கிகளில் தலைவர் பதவியில் உள்ளவர்கள் அதிமுகவினர். அந்த அளவிற்கு பணியாற்ற தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்" என பேசினார்.

    alliance and policy are different says sellur raju

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில் "40 தொகுதிகளிலும் பெற்றி பெறுவோம் என நமது மூத்தவர் ராம்தாஸ் அய்யாவே சொல்லி விட்டார். தேர்தல் கூட்டணி என்பது வேறு, கொள்கை கூட்டணி என்பது வேறு.

    ஜெயலலிதா இல்லாத சூழலில் நல்ல முடிவை முதல்வர், துனை முதல்வர் எடுத்து உள்ளார்கள். வெற்றி நோக்கி தான் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. மக்களை எதிர் பார்த்த கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.

    alliance and policy are different says sellur raju

    கட்சியை வளர்க்க பல்வேறு கருத்துக்கள் பேசப்படும். சாணக்கிய, சாதுர்யமான கூட்டணி அதிமுக கூட்டணி. திமுக எந்தவொரு கொள்கை பிடிப்போடு கூட்டணி வைத்து உள்ளதோ அதே கொள்கை பிடிப்போடு அதிமுக கூட்டணி வைத்து உள்ளது. அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது" என கூறினார்

    English summary
    Minister Sellur Raju has justified the alliance with ADMK and PMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X