மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாக்கிங் போன அமமுக பிரமுகர்.. வளைத்து மடக்கிய 8 பேர்.. ஓட ஓட விரட்டி படுகொலை

Google Oneindia Tamil News

மேலூர்: வாக்கிங் சென்று சென்று கொண்டிருந்த அமமுக பிரமுகரை, 8 பேர் சுற்றி வளைத்து கொண்டதுடன், ஓட, ஓட அரிவாளால் வெட்டி சாய்த்து விட்டனர்.. இதனால் மேலூர் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிராமம் அ.வல்லாளப்பட்டி.. இங்கு வசித்து வந்தவர் அசோகன்.. இவருக்கு வயது 50 ஆகிறது.. அமமுக பிரமுகர்.. முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரும்கூட.. அருண்தேவி என்ற மனைவி 2 மகள்களுடன் வசித்து வந்தார்.

இவர் தினமும் காலையில் வாக்கிங் போவது வழக்கம்.. அப்படி செல்லும்போது, அந்த பகுதியில் உள்ளவர்களுடன் சேர்ந்துதான் அசோகன் வாக்கிங் போவாராம்.. அப்படித்தான், இன்று காலையும் உறவினர் கார்த்திகை சாமியை அழைத்து கொண்டு, அழகர்கோவில் ரோட்டில் வாக்கிங் போனார்.

கல்யாணம் ஆகி 2 வாரம்தான்.. அதுக்குள்ள கர்ப்பமா.. அதிர்ந்த கணவன்.. டெஸ்ட்டுக்கு ரெடி.. மனைவி சவால்கல்யாணம் ஆகி 2 வாரம்தான்.. அதுக்குள்ள கர்ப்பமா.. அதிர்ந்த கணவன்.. டெஸ்ட்டுக்கு ரெடி.. மனைவி சவால்

அலறினார்

அலறினார்

செட்டியார்பட்டி மதனம்பாறை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, மொத்தம் 4 பைக்குகளில் 8 பேர் வந்து வழிமறித்து நின்றனர். அவர்களை பார்த்ததும் அசோகன் பீதியில் அலறினார்.. 8 பேர் கையிலுமே பயங்கரமான ஆயுதங்கள் இருந்தன.. அசோகன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

ரத்த வெள்ளம்

ரத்த வெள்ளம்

ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அசோகனை விரட்டி சென்ற கும்பல், அங்கேயே வெட்டி சாய்த்துவிட்டு தப்பியது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார் அசோகன். தகவலறிந்து மேலூர் போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர்.. கொலையாளிகள் யார் என்று தெரியவில்லை.. எதற்காக வெட்டி கொன்றார்கள் என்றும் தெரியவில்லை.. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

சடலம்

சடலம்

இதனிடையே மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அசோகனின் உடல் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், போஸ்ட் மார்ட்டம் செய்ய போதிய வசதி இல்லை, அதனால், சடலத்தை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். அதனால், ஆம்புலன்சு மூலம் அசோகன் உடலை மதுரைக்கு கொண்டு போலீசார் முயன்றனர்.

மறியல்

மறியல்

இதற்கு உறவினர்களும், கட்சிக்காரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். "உடலை மதுரைக்கு கொண்டு செல்லக்கூடாது, கொலையாளிகளை உடனே கைது செய்யுங்கள்" என்று சொல்லி என்று மறியலில் ஈடுபட்டனர். மேலூர் பஸ் ஸ்டாண்டிலும் இந்த போராட்டம் வலுத்தது.. அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.. இதனால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

English summary
AMMK senior member brutally murdered by mysterious group near Melur and public protest
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X