மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவரை விரட்டி விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்

Google Oneindia Tamil News

Recommended Video

    காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவரை வெட்டிக் கொன்ற கும்பல்

    மதுரை: மதுரையில் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த இருவரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டியது. இதில் ஒருவர் பலியாகிவிட்டார். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த அஜித் மற்றும் அவருடைய அண்ணன் ரஞ்சித் இருவரும் கடந்த 12-ஆம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தனர்.

    An unknown gang murder a man near Madurai police station

    அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ரஞ்சித் மற்றும் அஜித்தை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது. இதில் அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த அண்ணன் ரஞ்சித் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் காவல் துறையினர் 6 பிரிவின் கீழ் அஜித்தின் நண்பன் விக்னேஷ் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட அஜித்தின் நண்பன் விக்னேஷ் மற்றும் வின்செட் செல்வராஜ் இருவரும் மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

    மாமாவுக்கு வயசாயிருச்சு... அத்தை மீது ஆசையில் ஆள்வைத்து கொன்ற மருமகன் - கூலி 7000 மட்டுமேமாமாவுக்கு வயசாயிருச்சு... அத்தை மீது ஆசையில் ஆள்வைத்து கொன்ற மருமகன் - கூலி 7000 மட்டுமே

    காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் நண்பர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாகவே இந்த படுகொலை அரங்கேறியது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

    பட்டப்பகலில் காவல் நிலையத்தில் அருகே ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    An unknown gang murder a man near Madurai police station. His brother injured and admitted in Police station.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X