• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"ஓவர் டார்ச்சர்".. நர்ஸ்களைகூட விட்டு வைக்காத "மாஜி" மணிகண்டன்.. அடுத்தடுத்து கிளம்பும் புகார்கள்..!

Google Oneindia Tamil News

மதுரை: பெண் டாக்டர்கள், நர்சுகளுக்கு ஏகப்பட்ட தொல்லை தந்தவராம் மாஜி அமைச்சர் மணிகண்டன்.. 2016-க்கு முன்பு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நிபுணராக மணிகண்டன் வேலை பார்த்தபோது, பெண் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பெண் ஊழியர்களிடமும் மணிகண்டன் தவறாக நடக்க முயன்றாராம்.. இந்த விஷயம் தற்போது வெடித்து வெளியே வந்துள்ளது.

ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், ராமநாதபுரத்தில் சீட் வாங்குவதில் கட்சிக்குள் பஞ்சாயத்து வரும்.. அன்வர் ராஜாவுக்கும், அமைச்சர் மணிகண்டனுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தமாகவே இருக்கும்..

இவர்கள் இருவருமே இந்த தொகுதியில் போட்டியிட அதிமுகவை நெருக்கி கொண்டேயிருப்பார்கள்.. இந்த கோஷ்டி பூசலை பார்த்து அரண்ட அதிமுக, பேசாமல் ரெண்டு பேருக்கும் சீட் தராமல், கூட்டணி கட்சியான பாஜகவுக்கே தொகுதியை ஒதுக்கலாம் என்றுதான் கடந்த முறை நயினார் நாகேந்திரனுக்கு ஒதுக்கியது.

3 முறை கருவுற்றேன்.. கட்டாயப்படுத்தி கலைத்தார் மணிகண்டன்.. காப்பர் டி போடவைத்தார்.. குமுறிய சாந்தினி3 முறை கருவுற்றேன்.. கட்டாயப்படுத்தி கலைத்தார் மணிகண்டன்.. காப்பர் டி போடவைத்தார்.. குமுறிய சாந்தினி

பதவி

பதவி

கடந்த 2016-ல் அமைச்சர் பதவி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பதவி போன்றவற்றை ஜெயலலிதா தந்து அழகுபார்த்தார்.. ஆனால், மணிகண்டனின் ஓவர் பேச்சால், அந்த பதவி பறிக்கப்பட்டு, முனியசாமிக்கு தரப்பட்டது.. அப்போதுமுதல், இவர்கள் இருவருக்கும் ஏழாம்பொருத்தமாகிவிட்டது. இதைதவிர, மணிகண்டன் அடாவடி பேச்சினால், பல ராமதநாதபுர அதிமுகவினர் அமமுகவுக்கு எகிறினர்..

 சர்ச்சை

சர்ச்சை

அப்போதும் மணிகண்டன் அடங்கவில்லை.. "அதிமுக கரை போட்ட வேட்டிகளை அமமுகவினர் யாராவது கட்டினால் நடுரோட்டிலேயே உருவுங்கள், கேஸ் போட்டால் நான் பார்த்துக்கறேன்" என்று பேசிய பேச்செல்லாம் சர்ச்சையாக வெடித்தது. இப்படி ராமதநாதபுரம் அதிமுகவினரிடம் பிரச்சனை, அன்வர்ராஜாவுடன் பிரச்சனை, முனியசாமியிடம் பிரச்சனை என மொத்த பேரின் அதிருப்தியை வெகு எளிதாக சம்பாதித்து கொண்டார் மணிகண்டன்.

தலைமை

தலைமை

இந்த புகார்களெல்லாம் அதிமுக தலைமைக்கு சென்று கொண்டே இருந்தது.. இறுதியில், கடந்த 2019, ஆகஸ்ட் மாதம், டிவி தொடர்பாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பற்றி ஏடாகூடமாக பேசவும், அதுவும் சர்ச்சையாக வெடித்து, அப்போதே அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு விட்டது. இந்த 4 வருஷ ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி, ஒரு அமைச்சரின் பதவியை பறித்தார் என்றால் அது மணிகண்டன் பதவியைதான்.. அந்த அளவுக்கு கட்சி தலைமை அப்செட் ஆகிவிட்டது..

 சாக்கடை நீர்

சாக்கடை நீர்

இதற்கு பிறகு எத்தனையோ விதங்களில் தலைமையிடம் நன்மதிப்பை பெற மணிகண்டன் முயற்சித்தார்.. எதுவுமே பலனளிக்கவில்லை. இப்போதுகூட அவருக்கு சீட் தரவே இல்லை.. அந்த கடுப்பினாலோ என்னவோ, தான் குடியிருக்கும் வீட்டருகே சாக்கடை நீர் ஓடுகிறது என்று சொல்லி வீட்டு வாசலில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினர்.. ஆளும் தரப்பை குறை சொல்லி மணிகண்டன் நடத்திய இந்த தர்ணா, தலைமைக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியது.

 சாந்தினி

சாந்தினி

இப்படிப்பட்ட சூழலில்தான், நடிகை சாந்தினியின் புகார் வெடித்து கிளம்பியது.. இந்த புகாரையும் மறுத்து பேசிய மணிகண்டன், சாந்தினி பணம் பறிப்பதாக குற்றஞ்சாட்டினார்.. ஆனாலும் வலுவான ஆதாரங்களின் அடிப்படையிலேயே தற்போது 6 பிரிவுகளில் மணிகண்டன் மீது போலீஸார் புகார் தெரிவித்துள்ளனர்... ஆனால், அரசியலுக்கு வருவதற்கு முன்பே மணிகண்டனின் போக்கு இப்படித்தான் இருந்ததாம்.. அப்போது மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நிபுணராக மணிகண்டன் வேலை பார்த்து வந்துள்ளார்..

நர்ஸ்கள்

நர்ஸ்கள்

அந்த சமயத்தில் தன்னுடன் பணியாற்றும் பெண் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பெண் ஊழியர்கள் என பலரிடம் மணிகண்டன் தவறாக நடக்க முயன்றாராம்... இதுகுறித்து அப்போதைய டீன் சிவக்குமாரிடமும் புகார்கள் சென்றுள்ளதாம்.. அவ்வளவு ஏன், செவிலியர் சங்கத்தினர், டீன் அலுவலக வாசலில் மணிகண்டனை கண்டித்து ஆர்ப்பாட்டமே நடத்தினார்களாம்.. இந்த புகார்களும் இன்னும் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

ரவுடி

ரவுடி

இது எல்லாவற்றிற்கும் மேலாக இன்னொரு ஹைலைட் உள்ளது.. கொக்கி குமார் என்று ஒரு ரவுடி.. இவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்.. இவர்மீது ஏகப்பட்ட கேஸ்கள் உ ள்ளன.. அதுசம்பந்தமாக கொக்கி குமாரை ஒருமுறை போலீசார் கைது செய்ய முயன்றபோது, அந்த 2 போலீஸ்காரர்களையும் தாக்கிவிட்டார்.. இதையடுத்து, ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொக்கி குமார் சிகிச்சை பெற்றபோது, ஆஸ்பத்திரிக்கே வந்து கொக்கி குமாரை நலம் விசாரித்து விட்டு சென்றவர்தான் மணிகண்டன்...!

English summary
Another Complaint against Ex Minister Manikandan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X