மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நந்தினிக்கு அடுத்த வாரம் கல்யாணம்.. இப்ப போய் ஜெயில்ல போட்டுட்டாங்களே.. சமூக ஆர்வலர்கள் குமுறல்!

நந்தினி மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    நந்தினிக்கு கல்யாணம், ஜெயில்ல போட்டுட்டாங்களே ? சமூக ஆர்வலர்கள் குமுறல்!-வீடியோ

    மதுரை: நந்தினிக்கு அடுத்த வாரம் கல்யாணம்.. இப்படி ஜெயில்ல போட்டு பழி வாங்கறாங்க.. கல்யாணம்கூட போராடிதான் நடக்கணுமா" என்று சமூக போராளி நந்தினியின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    தமிழகத்தில் மது ஒழிப்பினை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாக போராடி வருபவர் நந்தினி. தனது தந்தை ஆனந்துடன் சேர்ந்து அமைதி வழியில் பல போராட்டங்களை முன்னெடுத்தவர். 2014-ல் துண்டு பிரசுரம் வழங்கியதற்காக நந்தினி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார்.

    இது சம்பந்தமான வழக்கு நேற்று திருப்பத்தூர் கோர்ட்டில் நடந்தது. அப்போது, வழக்கு விசாரணையின்போது, மது, போதை பொருளா, மருந்து பொருளா? போதை பொருள் என்றால் சட்டப்படி விற்கக் கூடாது. விற்கிறவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" என்று நந்தினி கூச்சலிட்டதாக தெரிகிறது

    என்ன சொல்ல வர்றீங்க தமிழிசை.. எங்க வேலையை நாங்க பார்க்கறோம்.. ஜோதிமணி நறுக் பதிலடி என்ன சொல்ல வர்றீங்க தமிழிசை.. எங்க வேலையை நாங்க பார்க்கறோம்.. ஜோதிமணி நறுக் பதிலடி

    ஆதரவு குரல்

    ஆதரவு குரல்

    இதையடுத்து ஜூலை 9-ம் தேதி வரை தந்தை, மகளை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டதைதொடர்ந்து, இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நந்தினிக்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

    வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    வருகிற 5-ம் தேதி நந்தினிக்கு கல்யாணம், பள்ளிகால நண்பர் குணா ஜோதிபாசுவை கரம் பிடிக்க உள்ளார். இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளது, குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நந்தினி கைது கண்டித்து வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. அதில் திருமணம் செய்ய போகும் மணமகன் குணா ஜோதிபாசு தெரிவித்துள்ளதாவது:

    துண்டு பிரசுரம்

    துண்டு பிரசுரம்

    "நந்தினி, ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைச்சிருக்காங்க. இது 2014-ல் போடப்பட்ட ஒரு பொய் வழக்கு. நந்தினி லா-காலேஜில் 4-ம் வருஷம் படிக்கும்போது, டாஸ்மாக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகித்தாங்க நந்தினியும், ஆனந்தனும்.

    குறுக்கு விசாரணை

    குறுக்கு விசாரணை

    அப்போ போலீஸை இவர்கள் இருவரும் தாக்கினார்கள் என்று ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு இது. 5 வருஷம் கழிச்சு இன்னைக்கு இது விசாரணைக்கு வந்தது. அப்போ போலீசை இவர்கள் ரெண்டு பேரும்தான் தாக்கினார்கள் என்று ஒரு சாட்சி கொண்டு வந்தாங்க. குறுக்கு விசாரணையில் 2 கேள்வி கேட்டாங்க. ஒன்று, டாஸ்மாக்கில் விக்கிறது உணவு பொருளா, போதை பொருளா, மருந்து பொருளா? என்பதுதான்.

    சட்டப்போராட்டம்

    சட்டப்போராட்டம்

    இதற்கு நந்தினி தரப்பில், போதை பொருள் என்றால் சட்டப்படி விற்க கூடாது. விற்கிறவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொன்னதற்கு, கேசுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். இது ஒரு சட்டப்போராட்டம்.. இப்படி கோர்ட்டில் கேள்வி கேட்டுவிட்டார்கள் என்பதற்காக நீதிமன்ற அவமதிப்பு போட்டு ஜெயிலில் அடைத்துள்ளார்.

    பழி வாங்குறாங்க

    பழி வாங்குறாங்க

    நந்தினிக்கு திருமணத்துக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. இது பழி வாங்குவதற்காகவே, 2014-ல் போடப்பட்ட பொய்வழக்கை இன்னைக்கு வெளியே கொண்டு வந்து, அவங்க மேல கேள்வி கேட்டாங்கன்னு ஒரு குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு நாளை முன்ஜாமீன் கோர உள்ளோம்.

    நாங்கள் தயார்

    நாங்கள் தயார்

    அப்படி பெயில் கிடைக்கவில்லையானால், 5-ம் தேதி நடக்க உள்ள திருமணத்தை கேன்சல் செய்துவிட்டு, இன்னொரு நாள் நடத்துவோம். திருமணத்துக்கு பிறகும் நந்தினி மக்கள் போராட்டங்களை தொடர வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் திருமணமே போராட்டமா இருக்கு. இதை சந்திக்க நாங்கள் தயார்" என்கிறார்.

    English summary
    Viral video about Anti liquor Activist Nandhini and her father should be released from Madurai Jail
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X