துண்டு போட்ட "சீனியர்கள்".. கறார் காட்டிய திமுக.. சிக்க போகும் அதிகாரிகள்.. மதுரை ஆவின் பரபரப்பு
மதுரை: கடந்த காலங்களில் ஒவ்வொரு துறையிலும் நடந்த ஊழல்கள், முறைகேடுகள் குறித்து, திமுக அரசு அதிரடிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆவின் பக்கம் தன் கவனத்தை திருப்பி உள்ளது.
மதுரை ஆவினில் கடந்த சில வருடங்களாகவே, பால் கொள்முதலில் முறைகேடு, பால் வாகனங்களில் முறைகேடு, விதிகளை மீறி தலைவர் தேர்வு, பணம் வாங்கிக்கொண்டு பணி நியமனம், மோசடி என ஏராளமான புகார்கள் வந்து கொண்டிருந்தது.
ஒருகட்டத்தில் பெண் தொழிலாளர்கள் இது தொடர்பாக புகார் தந்தனர்.. அதன்படி, 2 வருடங்களுக்கு முன்பு, மதுரை ஆவின் பொது மேலாளர் ஜெயஸ்ரீ மாற்றப்பட்டார்... அதற்குபிறகு ஜனனி சவுந்தர்யா பொறுப்பேற்றார்..

சவுந்தர்யா
அவர்மீதும் புகார்கள் கிளம்பியது.. சவுந்தர்யாவால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மேனேஜர் தற்கொலை செய்துகொண்டது சர்ச்சையை உருவெடுத்த நிலையில், அவரும் டிரான்ஸ்பர் ஆகி சென்றுவிட்டார். அப்போதுதான், 13.71 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... ஆவினில் நடைபெறும் முறைகேடுகளை எதிர்த்து பல வழக்குகளை விடாமல் தாக்கல் செய்தவர் ஓய்வுபெற்ற ஆவின் திமுக தொழிற்சங்க நிர்வாகி மானகிரி கணேசன் ஆவார்.

துண்டு போட்ட சீனியர்கள்
இதனிடையே, மதுரை ஆவினில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு காரணமான, பாண்டி, பரமானந்தம் ஆகியோர் திமுகவில் சேர துண்டுபோடும் முயற்சியை மேற்கொண்டதாகவும், ஆனால் அவர்களை திமுக தரப்பில் சேர்க்கவில்லை என்றும் கறாராக சொல்லப்பட்டுவிட்டன.. இந்நிலையில், மதுரை ஆவினில் நடந்த பணி நியமனங்கள், முறைகேடுகள் குறித்து துணை பதிவாளர் கணேசன் தலைமையில் விசாரணை துவங்கி உள்ளது பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்டுத்தி வருகிறது.

நேர்காணல்
2020ல் மேலாளர் முதல் டெக்னீஷியன்கள் வரை 61 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் பலர் நியமனம் செய்யப்பட்டனர்... இதற்கான அறிவிப்பு கடந்த 2019ல் வெளியானது.. இதில் தகுதியில்லாதவர்களுக்கு பணி வழங்கியது, எழுத்து தேர்வு வினாத்தாளை லீக் செய்தது, செக் மோசடி, தகுதியானவர்களுக்கு நேர்காணல் நடத்தாதது, என பல முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சைகள் வலம்வந்த நிலையில், இதுகுறித்து ஆவின் விஜிலென்ஸ் அதிகாரிகள் குழு விசாரணைகளையும் பலகட்டங்களாக நடத்தினர்.. அந்த அறிக்கையும் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டது.

சிக்கும் அதிகாரிகள்
இதில் மேற்கண்ட அத்தனை முறைகேடுகளும் உறுதி செய்யப்பட்டன.. இதையடுத்து, கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 81ன்படி, துறைரீதியான விசாரணையை துணைப்பதிவாளர் கணேசன் ஆரம்பித்துள்ளார்.. 2019- போலவே, 2020ம் ஆண்டிலும் முறைகேடுகள் பல நடந்து உறுதியாகி உள்ளதால், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.. எப்படி பார்த்தாலும் ஆவினில் பல சீனியர்கள் சிக்க போவது உறுதி என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்..!