மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிவியில் ஆபாசத்தை தூண்டும் விளம்பரங்களுக்கு தடை – மதுரை ஹைகோர்ட் பெஞ்ச் அதிரடி

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ஆபாசத்தை தூண்டும் உள்ளாடை, கருத்தடை சாதன விளம்பரங்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: உள்ளாடை, கருத்தடை சாதங்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களின் விளம்பரங்களில் அதீத ஆபாச காட்சிகள் உள்ளதால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ஆபாசத்தை தூண்டும் விளம்பரங்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.

தொலைக்காட்சிகளில் டிவி சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகும் நேரங்களை விட விளம்பரங்களே அதிக அளவில் ஒளிபரப்பாகி வருகின்றன. கொரோனா லாக்டவுன் காரணமாக தியேட்டர்கள், பார்க், பீச், பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்ல தடை நீடிப்பதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றனர். அனைவருக்கும் இப்போது உள்ள ஒரே பொழுது போக்கு தொலைக்காட்சி மட்டுமே.

Ban on pornographic advertisements on TV - Madura High Court Bench Action

சீரியலோ, நிகழ்ச்சியோ பார்க்கும் போது இடையில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் பலவும் ரசிக்கும் படியாக இருப்பதில்லை. பல விளம்பரங்கள் ஆபாசங்கள் நிறைந்ததாக உள்ளன. இந்த விளம்பரங்களுக்கு தடை விதிக்க மாட்டார்களா என்று கூட பெரியவர்களும் பேச ஆரம்பித்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தொலைக்காட்சிகளில் வெளியாகும் கருத்தடை சாதனம், உள்ளாடை மற்றும் அழகு பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் ஆபாச உணர்வை தூண்டுவதாக உள்ளதாக தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் பாலியல் ரீதியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இரவு 12 மணி முதல் காலை 6 மணிக்குள் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவை பின் தொடரப்படுவதில்லை என்றும், அதுபோல உள்ளாடை, கருத்தடை சாதங்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களின் விளம்பரங்களில் அதீத ஆபாச காட்சிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா.. சாதியத்தின் மீது ஏரோப்பிளேனை இறக்கிய வானம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா.. சாதியத்தின் மீது ஏரோப்பிளேனை இறக்கிய "சூரன்" சூர்யா.. வெல்டன்

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், ஆபாச விளம்பரங்கள் தொடர்பான புகார் குறித்து தமிழக செய்தி, தகவல் தொழில்நுட்ப துறை செயலர் உள்ளிட்டவர்களை 2 வாரங்களுக்கு விளக்கம் அளிக்க சொல்லி உத்தரவிட்டனர்.

தொலைக்காட்சியில் வெளியாகும் இவ்வாறான ஆபாச விளம்பரங்களுக்கும் இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே ஆன்லைன், ஒடிடி, இணைய தளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு மத்திய அரசு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The Madurai branch of the High Court has banned pornographic advertisements on television due to excessive pornography in advertisements for items including underwear, contraceptives and perfumes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X