மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னது கோவிலில் பிரியாணி பிரசாதமா? மதுரை முனியாண்டி கோவில் திருவிழாவால் கோபத்தில் வடஇந்தியர்கள்!

மதுரை முனியாண்டி கோவிலில் கடவுளுக்கு பிரசாதமாக பிரியாணி படைக்கப்பட்டது வடஇந்திய இந்துக்கள் இடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவிலில் பிரியாணி பிரசாதமா?.. கோவில் திருவிழாவால் கோபத்தில் வடஇந்தியர்கள்- வீடியோ

    மதுரை: மதுரை முனியாண்டி கோவிலில் கடவுளுக்கு பிரசாதமாக பிரியாணி படைக்கப்பட்டது வடஇந்திய இந்துக்கள் இடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து டிவிட்டரில் பலர் கோபமாக டிவிட் செய்துள்ளார்.

    பொதுவாக தமிழகம் பல விஷயங்களில் வித்தியாசமானது. முக்கியமாக இந்து மத கடவுள் வழிபாட்டு முறையில் பல வித்தியாசங்களை தமிழர்களை கடைப்பிடித்து வருகிறது. பொதுவாக இந்து மத கோவில்களில் அசைவம் பிரசாதமாக கொடுப்பது வழக்கமில்லை. ஆனால் தமிழகத்தில் குல தெய்வம் கோவில்களில், அசைவ உணவுதான் பிரதான பிரசாதமாக வழங்கப்படும்.

    இன்னும் சில கோவில்களில் மது பாட்டில்கள் கூட கடவுளுக்கு படைக்கப்படுவது வழக்கம். கிராமங்களில் இந்த வழக்கம் பல்லாயிரம் வருடங்களாக கடைசிப்பிடிக்கப்ட்டு வருகிறது. இந்த நிலையில் இதற்கு வடஇந்தியாவை சேர்ந்த இந்துக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    என்ன செய்தி

    மதுரை வடக்கம்பட்டியில் கடந்த வாரம் நடந்த திருவிழாவில்,முனியாண்டி கோவிலில் 250 கிலோ ஆடு பிரியாணியும், 300 கிலோ கோழி பிரியாணியும் படையலாக அளிக்கப்பட்டு மக்களுக்கு பின் பரிமாறப்பட்டது. இதை குறித்து ஏஎன்ஐ செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டு டிவிட் செய்து இருந்தது. இந்த செய்தித்தாள் வடஇந்தியர்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

    கடவுளே

    இவர், ஐயோ யாரவது இதை நிறுத்துங்களேன். இதுஇந்து மதத்திற்கு எதிரானது.. என்று கோபமாக பொங்கி இருக்கிறார். இவரை போலவே பலர் இந்த பல்லாண்டு நடவடிக்கையை புரிந்து கொள்ளாமல் டிவிட் செய்து இருக்கிறார்கள்.

    நான் வெஜ் டெம்பிள்

    ஐயோ இது என்ன நான் வெஜ் டெம்பிளா என்று இவர் அதிர்ச்சியாக கேட்டு இருக்கிறார்... எஸ் பாஸ்!

    இதுவா பிரசாதம்

    வடஇந்தியாவை சேர்ந்த இவர்.. இதை பிரசாதம் என்று அழைக்காதீர்கள் என்று கூறி புலம்பி இருக்கிறார்.

    வழக்கம்

    அதே சமயம் இவர், மகாராஷ்டிராவில் பல தேவி கோவில்களில் அசைவம் சமைப்பது வழக்கம் என்று கூறி இருக்கிறார்.

    வீட்டில்

    ஏன் கோழியையும், ஆட்டையும் பிரசாதமாக படிக்கிறீர்கள், உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள். இதை பிரசாதம் என்று எல்லாம் அழைக்காதீர்கள் என்று இவர் கூறியுள்ளார்.

    English summary
    Tamil Nadu: Biryani is served as 'prasad' at Muniyandi Swami temple in Vadakkampatti, Madurai. A devotee says,'I come here every yr,we're celebrating this festival for last 84 yrs.Around 1000 kg rice,250 goats&300 chickens are used to make biryani, we use public donations for it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X