மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மு.க.ஸ்டாலின் காரை மறித்த பாஜகவினர்... மதுரையில் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    H Raja slams Congress, Dmk and supports Rajini

    மதுரை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காரை மதுரையில் பாஜகவினர் மறித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்வதாக மதுரை சென்ற மு.க.ஸ்டாலின், புதூர் கற்பகம் நகர் வழியே காரில் சென்று கொண்டிருந்த போது இந்த நிகழ்வு நடைபெற்றது.

    ஸ்டாலின் கார் மறிக்கப்பட்ட தகவலறிந்து நூற்றுக்கணக்கான திமுகவினர் திரண்டு வந்தனர். அதை அறிந்த பாஜகவினர் அங்கிருந்து உடனடியாக கலைந்து சென்றனர்.

    பாஜக மறிப்பு

    பாஜக மறிப்பு

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார். சங்கம் ஹோட்டலில் இருந்து புதூர் கறபகம் நகர் வழியாக ஸ்டாலின் சென்றுகொண்டிருந்த போது 5 பேர் கொண்ட பாஜக குழுவினர் திடீரென அவரது காரை மறித்து முழக்கமிட்டனர்.

    பாதுகாப்பு படை

    பாதுகாப்பு படை

    இதையடுத்து மு.க.ஸ்டாலினின் மெய்காவலர்கள் மற்றும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் எந்த தாமதமும் மின்றி அடுத்த சில நொடிகளில் பாஜகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தி வழியை ஏற்படுத்திக் கொடுத்தனர். அதன் பிறகு ஸ்டாலின் கார் புறப்பட்டுச் சென்றது.

    நூற்றுக்கணக்கானோர்

    நூற்றுக்கணக்கானோர்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கார் வழிமறிக்கப்பட்ட தகவல் மதுரை திமுகவினருக்கு காட்டுத் தீ போல் பரவியது. அடுத்த 20 நிமிடங்களில் நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்திற்கு திரண்டுவிட்டனர். இதனிடையே திமுகவினர் வரும் தகவல் அறிந்து ஸ்டாலின் காரை மறித்த 5 பேரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    காவல்துறை

    காவல்துறை

    இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரின் வாகனத்தை மறிக்கும் அளவுக்கு மதுரையில் சட்டம் ஒழுங்கு உள்ளதாகவும், காவல்துறையினர் இதனை வேடிக்கை பார்ப்பது ஏற்கத்தக்கதல்ல எனவும் மதுரை திமுகவினர் புகார் தெரிவிக்கின்றனர்.

    English summary
    bjp cadres in madurai protest before the mk stalin car
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X