Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடஇந்திய ஸ்டைல்! திருப்பரங்குன்றத்தில் வேட்பாளரை இறக்க பாஜக பிளான்! அதிமுகவிடம் கேட்டு வாங்க முடிவு?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கோவில் தீபாவம் சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், வரவிருக்கும் 2026 சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) இத்தொகுதியில் வேட்பாளரை நிறுத்தலாம் என்ற யூகங்கள் வலுப்பெற்றுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பாஜக இங்கே களமிறங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பாரம்பரியமாக, இத்தொகுதி அ.தி.மு.க. அல்லது தி.மு.க. போன்ற திராவிடக் கட்சிகளால் வெல்லப்பட்டு வந்துள்ளது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் வி.வி.ராஜன் செல்லப்பா வெற்றி பெற்றார்.

திருப்பரங்குன்றம் மலைக்கோவிலின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதே தற்போதைய சர்சைக்கான முக்கியக் காரணம். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பும் இக்கோரிக்கையை உறுதிப்படுத்தியது. கோவில் நிர்வாகமும் மாநில அதிகாரிகளும் தீர்ப்பைச் செயல்படுத்தாததால், இந்து அமைப்புகளும் பா.ஜ.க. தோழமைக் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டன. போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் வெடித்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) உட்பட பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டன. மத விவகாரத்தில் மத்தியப் படையின் இத்தலையீடு ஓர் அரிய நிகழ்வு.

BJP eyes Thiruparankundram seat as temple issue reshapes local politics

திருப்பரங்குன்றத்தில் நடந்தது என்ன?

நேற்று திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு செய்தார். நேற்று மாலை இந்த வழக்கு அவசரமாக விசாரிக்கப்பட்டது. நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று கூறியும், தீபத்தூணில் விளக்கு ஏற்றாத காரணத்தால் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, திரண்டிருந்த இந்து முன்னணி கட்சியினர், தடுப்புகளை உடைத்துச் சென்றனர். ஆனால் போலீஸ் அவர்களை அனுமதிக்காத நிலையில் CISF வீரர்களுடன் செல்லுமாறு மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார் இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று CISF வீரர்களை அழைத்துக்கொண்டு பல்வேறு இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வந்தனர். ஆனால் அவர்களை அனுமதிக்காத போலீஸ் அதிகாரிகள் We're not allowing...We'll face the consequences என்று குறிப்பிட்டனர்.

பாஜகவிற்கு கிடைத்த வாய்ப்பு

இந்த விவகாரம் பா.ஜ.க.வுக்கு வலுவான அரசியல் வாய்ப்பாகக் கருதப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை உள்ளூர் கோவில் அதிகாரிகள் மூலம் மாநில அரசு எதிர்ப்பதாக அக்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். மேலும், தி.மு.க. ஆட்சிக்கு ஒரே நம்பகமான மாற்று தற்போதைய கூட்டணிதான் என இந்து வாக்காளர்களுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மறுபுறம், தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இப்போராட்டங்களை மத ரீதியான தூண்டுதல் என்று கண்டித்து, மத விவகாரங்களை அரசியல்மயமாக்குவதற்கு எதிராக எச்சரித்துள்ளன.

அடையாளம் மற்றும் நம்பிக்கை சார்ந்த உணர்வுகள் தீவிரமடைந்துள்ள இச்சூழலில், திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க. நேரடியாக அ.தி.மு.க. கூட்டணி வழியாக களமிறங்க முயற்சிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பழமைவாத மற்றும் மதச் சார்பு வாக்காளர்களிடையே தங்கள் செல்வாக்கைச் சோதித்து, அப்பகுதியின் பாரம்பரிய திராவிட ஆதிக்கத்தை மாற்றியமைப்பதே பா.ஜ.க.வின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது. முக்கியமாக பாஜக இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளது.

பாஜக கையில் எடுத்த அஸ்திரம்

இந்நிலையில், கார்த்திகை தீபத்தூணில் மகாதீபம் ஏற்ற இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபத்தூணில் மகா கார்த்திகை தினத்தன்று இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகமும் தமிழக அரசும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் அதற்கு தமிழக காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்புக்கு எதிராக தடை கோரி இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் அத்தீர்ப்பை அமல்படுத்த தடை கோரி மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

முதன் முதலில் அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய Religious Endowment Act என்கிற பெயரில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. கிறிஸ்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அன்று இருந்த கிறிஸ்தவ ஏகாதிபத்திய காலனி ஆட்சியாளர்கள் அச்சட்டத்திலிருந்து கிறிஸ்தவர்களுக்கு விளக்கு அளித்தனர். அதன் பிறகு அச்சட்டம் Hindu Muslim Endowment Act என மாற்றப்பட்டது. அச்சட்டத்திலிருந்து தங்களுக்கு விளக்களிக்க வேண்டுமென இஸ்லாமியர்கள் போராடியதைத் தொடர்ந்து அச்சட்டத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கும் விளக்கு அளிக்கப்பட்டது.

அதன் பிறகு Hindu Religious Endowement Act என சட்டம் பெயர் மாற்றப்பட்டு அதற்கென
Hindu Religious and Charitable Endowments என ஒரு துறை உருவாக்கப்பட்டு இன்று வரையிலும் இந்து மதத்தின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்காகவும், வழிபாட்டு முறைகளை சிதைப்பதற்காகவும் மட்டுமே அது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மண்ணின் மதமான பெரும்பான்மை இந்து சமுதாயத்திற்கு எதிராக மட்டுமே Hindu Religious and Charitable Endowments செயல்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் அதன் கடடுப்பாட்டில் வைத்திருக்கும் ஆலயங்களின் பொருளாதார விஷயங்களில் ஆலோசனைகள் வழங்கலாமே தவிர இந்து சமய சடங்குகளுக்கு தடை விதிக்கவோ அல்லது இந்து சமய வழிபாட்டு முறைகள் மற்றும் சடங்கு சம்பிரதாயங்களுக்கு தடை கோரவோ அதற்கு உரிமையோ அல்லது அதிகாரமோ கிடையாது.

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் பணி என்பது அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆலயங்களை பராமரித்து, பாதுகாத்து, பூஜை புனஸ்காரங்கள் தடையின்றி நடைபெறுவதற்கும் இந்து சமய சடங்கு சம்பிரதாயங்களை தொடர்ந்து ஆலயங்களில் கடை பிடிப்பதற்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காகவும் பணி செய்ய வேண்டுமே தவிர இந்துக்களுக்கு எதிராகவோ, ஆலயங்களை அழிப்பதற்கோ துணை போவது இந்து சமய அறநிலையத்துறையின் பணி அல்ல. நாளைய தினம் கார்த்திகை தீபத்தூணில் மகாதீபம் ஏற்ற இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும், என்று கூறி உள்ளார்.

வானதி சீனிவாசன்

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்துள்ள போஸ்டில், இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் திமுக அரசு ... தமிழ் கடவுளாம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை தீப ஏற்றுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், தற்போது அதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை பெயரில் கோடிகளில் கோவில் வருமானங்களை ஏற்றுக்கொள்ளும் இந்த திராவிட மாடல் அரசு இந்துக்களின் மத உணர்வினையும், வழிபாட்டு உரிமைகளையும் புண்படுத்தும் விதமாக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

தொடர்ந்து இந்து மத வழிபாடுகளுக்கு எதிராக விரோத மனப்பான்மையை ஏற்படுத்தி இறையாண்மையை அழித்து வருவது தான் சாபக்கேடாக விடியா திமுக அரசின் வழக்கமாக இருந்து வருகிறது. , என்று கூறி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+