மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரையில் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக பாஜக பேரணி- மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்பு

Google Oneindia Tamil News

மதுரை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக மதுரையில் பாஜக இன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தியது. இதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றார்.

நாடு முழுவதும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக பாஜகவினர் நாடு முழுவதும் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தீபிகா படுகோனின் சபாக் திரைப்படத்துக்கு வரிவிலக்கு- 3 மாநில காங். அரசுகள் அதிரடி தீபிகா படுகோனின் சபாக் திரைப்படத்துக்கு வரிவிலக்கு- 3 மாநில காங். அரசுகள் அதிரடி

மதுரையில் பாஜக பேரணி

மதுரையில் பாஜக பேரணி

தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக பாஜகவினர் பேரணி, பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். மதுரையில் இன்று நடைபெற்ற பாஜகவின் பேரணியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றார்.

ஸ்மிருதி இரானி தாக்கு

ஸ்மிருதி இரானி தாக்கு

இதில் பேசிய ஸ்மிருதி இரானி, இலங்கை தமிழர்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் திமுக செயல்படவில்லை. இந்துக்களை திமுகவுக்கு பிடிக்காது,

காங். மீது சாடல்

காங். மீது சாடல்

சீக்கியர்களை காங்கிரஸாருக்குப் பிடிக்காது. ஆனால் மத்திய அரசு அகதிகளாக வரும் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

வள்ளுவர் மண்ணில் இருந்து..

வள்ளுவர் மண்ணில் இருந்து..

இந்த திருவள்ளுவர் மண்ணில் இருந்து நான் கேட்பது, பாகிஸ்தானை ஏன் திமுக ஆதரிக்க வேண்டும்? தேசத்தை துண்டாட நினைக்கும் காங்கிரசுக்கு திமுக ஏன் ஆதரவாக இருக்கிறது?

காந்தி கனவு நிறைவேற்றம்

காந்தி கனவு நிறைவேற்றம்

குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம் மகாத்மா காந்தியின் கனவுகளை நிறைவேற்றி இருக்கிறது மத்திய அரசு. கடந்த கால வரலாற்று பிழைகளை மத்திய அரசு சரி செய்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை என்றார்.

English summary
Union minister Smriti Irani addressed a pro-CAA rally in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X