• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

சைக்கிள் கேப்பில் நுழைந்த பாஜக சீனிவாசன்.. "இடுப்பு + முதுகு 2 அடி வளைக்கணும்".. திமுக மீது பாய்ச்சல்

Google Oneindia Tamil News

மதுரை: தமிழகம் முழுவதுமே முதல்வர் ஸ்டாலின் படத்தோடு உதயநிதி படத்தையும் போடுகின்றார்கள்... முதுகு, இடுப்பை இரண்டடி வளைத்துதான் திமுக தலைவரை, அந்த கட்சி தொண்டர்கள் சந்திக்க முடியும் என்று, பாஜகவின் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் சீனிவாசன்.. சைக்கிள் கேப் கிடைத்தாலும், உள்ளே புகுந்து திமுகவை சரமாரி விமர்சித்துவிடுவார்.

எப்போது செய்தியாளர்களிடம் பேசினாலும், எங்களுக்கு எப்பொழுதும் பொது எதிரி திமுகதான்... அதிமுக மட்டுமல்ல, திமுகவில் இருந்தும் பாஜகவில் இணைய பலரும் தயாராக உள்ளனர் என்று சொல்வார்.

 வெயிலுக்கு இதமாய் இளநீர் கொடுத்த பெண்.. ’ரொம்ப நன்றிங்கம்மா’..! ருசித்து குடித்த முதல்வர் ஸ்டாலின்! வெயிலுக்கு இதமாய் இளநீர் கொடுத்த பெண்.. ’ரொம்ப நன்றிங்கம்மா’..! ருசித்து குடித்த முதல்வர் ஸ்டாலின்!

திருமாவளவன்

திருமாவளவன்

அதுமட்டுமல்ல, ராஜபக்சே விவகாரத்தின்போது திருமாவளவன் ஒரு கருத்து கூறியிருந்தார்.. ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் அதிகாரத்திலும், ஆட்சியிலும் இருந்தால் அந்த சமுதாயமும், நாடும் என்ன ஆகும் என்பதற்கு இலங்கை ஒரு உதாரணம்... அதே போல் தமிழகம் ஆகிவிடக்கூடாது என்று எச்சரித்திருந்தார்.. இந்த உதாரணத்தை, அப்படியே போய் திமுகவிடம் சொல்லுங்கள் திருமாவளவன் என்று பொதுவெளியிலேயே சொன்னவர்தான் பாஜகவின் சீனிவாசன்.

 குடும்ப ஆட்சி

குடும்ப ஆட்சி

அதாவது, தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது... சட்டமன்றத்தில் பேசக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட எழுதி வைத்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலினை பற்றி பேச வேண்டிய சூழ்நிலை என்ன இருக்கிறது? நாடாளுமன்றத்தில் பேசக்கூடிய யாராவது மோடியை பற்றி புகழ்ந்து பேசுகிறார்களா? ஒரு குடும்பத்தை தூக்கிப் பிடிக்க கூடிய சூழல் ஒரு கட்சிக்கே ஏற்பட்டிருக்கிறது... அதனால், இலங்கையிடம் இருந்து திமுக தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். திருமாவளவன் திமுகவிற்கு தான் டியூஷன் எடுக்க வேண்டுமே தவிர பாஜகவிற்கு அல்ல என்று கூறியிருந்தது அரசியல் களத்தில் சலசலப்பை உண்டுபண்ணியிருந்தது.

டியூஷன்

டியூஷன்

இந்நிலையில், மீண்டும் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோதும் திமுகவை சீண்டி உள்ளார் சீனிவாசன்.. பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார்.. அவர் வருவதற்கு 2 தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடந்த பாஜக தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவர் பாலசந்தர் கொலையை கண்டிக்கின்றோம். .. பிரதமர் வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்து உள்ளதால் இது ஒரு அச்சுறுத்தலாக இருக்குமோ என்று தெரிகிறது... கொலையாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

 சமூக நீதி

சமூக நீதி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டிருக்கும் பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் கட்டிப்பிடித்து வரவேற்பது நாசகார சக்திகளுக்கு உற்சாகம் தருவது போல் இருக்கிறது.. தமிழக பாஜகவுக்கு அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பிறகு, மாநில மாவட்ட நிர்வாகிகள் அமைப்பு சீரமைக்கப்பட்டு வருகிறது.. சமூக நீதியை நிலைநாட்டும் பாஜக, பிறப்பின் அடிப்படையில்தான் தலைவரை நியமிக்கிறது.

 அப்பாக்கள் - மகன்கள்

அப்பாக்கள் - மகன்கள்

திமுகவில் அந்தந்த மாசெ-க்கள் தங்களின் அப்பாக்களும், மகன்களின் படங்களுடன் போஸ்டர் ஒட்டுகிறார்கள். அமைச்சர்கள் கூட மகன்களின் படங்களோடுதான் போஸ்டர் ஒட்டுகிறார்கள். தமிழகம் முழுவதுமே முதல்வர் ஸ்டாலின் படத்தோடு உதயநிதி படத்தையும் போடுகின்றார்கள்.. உண்மையான சமூக நீதி சுயமரியாதை இருக்கின்ற கட்சி பாஜகதான். திமுகவில் முதுகு, இடுப்பு 2 அடி வளைத்துதான் கட்சி தொண்டர்கள், அந்த தலைவரைச் சந்திக்க முடியும் நிலைமை உள்ளது என்று விமர்சித்தார்.

English summary
bjp state general secretary srinivasan criticised dmk government and udhayanidhi stalin : ஸ்டாலின் மற்றும் உதயநிதி குறித்து பாஜகவின் சீனிவாசன் விமர்சித்துள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X