மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்கெங்கும் தண்ணீர்ப் பஞ்சம்.. குழாய் உடைந்து வீணான லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்.. மதுரையில் அவலம்

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரையில் குழாய் உடைந்து வீணான லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்..வீடியோ

    மதுரை: மாநிலத்தில் இன்னும் தண்ணீர் பிரச்சனை இன்னும் நீடிக்கும் நிலையில் மதுரையில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சென்றது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    மதுரை முடக்குசாலை பகுதியில் வைகையிலிருந்து அரசரடி நீரேற்றும் நிலையத்திற்கு கொண்டுவரப்படும் மெயின் குழாயில் இன்று காலை ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீர் சாலையில் ஆறுபோல சாலை வீணாக சென்றது.

    Breakdown of the main giant drinking water pipe..Drinking water that flooded the road

    பல மணி நேரத்திற்கு மேலாக லட்சக்கணக்கான லிட்டர் குடி தண்ணீர் வீணாக சாலையில் ஆறு போல சென்றதை பார்க்கும் போது, மிகுந்த மனவேதனை ஏற்பட்டது.

    Breakdown of the main giant drinking water pipe..Drinking water that flooded the road

    மாநகராட்சிக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் தாமதமாக வருகை தந்த்தால் பல லட்சக்கணக்கான தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வீணாகிவருகிறது. பிரமாண்ட குழாய் என்பதால் சீர்செய்வதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் செய்வதறியாமல் தலைஅளவு தண்ணீரில் மூழ்கியபடி எந்தவித பாதுகாப்பு உபகரணம் இன்றி பணியாற்றிவருகின்றனர்.

    தண்ணீரில் மூழ்கியபடி உடைப்பை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர். விநியோகம் நடைபெற்றுவரும் நிலையில் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறிவருவது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது

    சாலையில் சென்ற பொதுமக்களில் பலர் ராட்சத குழாய் உடைப்பை கண்ட மீண்டும் வந்த வழியே திரும்பி சென்றனர் அந்த அளவிற்கு சாலை முழுவதும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் போல சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    English summary
    Millions of liters of water were washed away in the main drinking water pipe in Madurai as the water problem in the state continues.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X