மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னது இந்த காளையா.. பெயரை கேட்டதுமே களத்தை விட்டு ஓடிய வீரர்கள்.. சுவாரசிய ஜல்லிக்கட்டு வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    வைரலாகும் மல்லம்பட்டி ஜல்லிக்கட்டு வீடியோ

    மதுரை: ஜல்லிக்கட்டில், ஒரு காளை மாட்டின் உரிமையாளர் பெயரை கேட்டதுமே, அத்தனை மாடுபிடி வீரர்களும், ஆளைவிடுங்கப்பா சாமி என ஒதுங்கிக் கொண்ட சுவாரஸ்ய நிகழ்வை பார்த்துள்ளீர்களா. இல்லையென்றால் இங்கே பாருங்கள்.

    உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. இதில் உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டினரும் திரளாக பார்வையாளர்களாக பங்கேற்று ரசித்தனர். வீடியோ எடுத்து ஷேர் செய்து மகிழ்ந்தனர்.

    சில காளைகள் காளையர்களால் அடக்கப்பட்டால், சில காளைகள் காளையர்களை பந்தாடி ஓடின. இப்படியாக, காளைகளுக்கும், காளையர்களுக்கும் நடுவே காலை முதலே, கடும் போட்டி நிலவியது. முன்னதாக அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் சிறப்பாக நடந்தேறியுள்ளன.

    ஜல்லிக்கட்டு சிங்கம்

    ஜல்லிக்கட்டு சிங்கம்

    இதேபோலத்தான் மல்லம்பட்டியிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வாடிவாசலை திறந்ததும் வெளியே வந்தது அந்த காளை. கன்னத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். அது காளையில்லை. சிங்கம்! அப்படித்தான் சொல்ல வேண்டும். ஏன்னா, அந்த பெயரை கேட்டதுமே அரங்கமே அதிர்ந்தது. மாடுபிடி வீரர்கள் அத்தனை பேரும், புலியை பார்த்த மான்கள் போல ஓட்டம்பிடித்தனர்.

    யார் அங்கே

    யார் அங்கே

    தடுப்புகளின் மீது ஏறி நின்று கொண்டு, வாடிவாசலை நோக்கியபடி, இமை கொட்டாமல், அச்சத்தோடு பார்த்தபடியே இருந்தனர். கம்பீரமாக வெளியே வந்தது அந்த காளை. வந்ததும் பிற காளைகளை போல அது நேராக ஓடவில்லை. "இங்கு யாரோ என்னை அடக்கனும்னு வந்தீங்களாமே.. யாருவே அது" என்று மைண்ட் வாய்ஸ்சில் கேட்டபடி அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்ததே பார்க்கலாம். மாடுபிடி வீரர்களின் இதய துடிப்பு 18 பட்டிக்கும் லப்-டப் என்று கேட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

    ஓடாதீங்கப்பா

    ஓடாதீங்கப்பா

    மேடையில் அமர்ந்தபடி மைக்கில் கமெண்டரி கொடுத்தவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஏம்ப்பா.. மாட்டக் கண்டா ஓடுறீங்களேப்பா.. மாடு பார்வையே சரியில்ல.. ஒரு பய கிரவுண்ட்ல இல்லை.. என்று ரன்னிங் கமெண்டரி கொடுத்தார். அவர் என்னதான், கிண்டல் செய்தாலும், மாடுபிடி வீரர்கள், தடுப்பை விட்டு இறங்குவதாக இல்லை.

    மாடுதான் அவர்களை பிடித்தது

    மாடுதான் அவர்களை பிடித்தது

    இதை பார்த்த வர்ணனையாளர், மாட்டை பிடித்தால் சைக்கிள் என்று அறிவித்தார். ம்ஹூம்.. பலனில்லை. 'ஆடி' காரே கொடுத்தாலும் சரி, ஒருத்தரும், அசையமாட்டோம் என்பதை போல காணப்பட்டனர். ஆனால், காளை விடுவதாக இல்லை. என்னையா அடக்க வந்தீங்க என்று கேட்பதைபோல முறைத்து பார்த்ததோடு, தடுப்பின் மீது ஏறி நின்ற ஒரு வீரரின் பின்பக்கத்தை கொம்பால் குத்தி தூக்கிப்போட்டது.

    பேரைக்கேட்டதும் அதிர்ந்த களம்

    பேரைக்கேட்டதும் அதிர்ந்த களம்

    இது மாடு இல்லைப்பா.. பாயும் புலி என்ற முடிவுக்கு வந்த போட்டி ஏற்பாட்டாளர்கள், மாட்டின் உரிமையாளரே மாட்டை பிடித்துக்கொண்டு சென்றுவிடுங்கப்பா. உங்கள் காளை ஜெயித்துவிட்டது. களத்தைவிட்டும் போக மாட்டேங்குது என கெஞ்ச ஆரம்பித்துவிட்டனர். இதன்பிறகு காளை களத்தை விட்டு அழைத்துச் செல்லப்பட்ட பிறகே, காளையர்கள் களத்திற்குள் வந்தனர். அப்பேர்ப்பட்ட அந்த காளையின் உரிமையாளர் பெயர், மாத்தூர் பாலச்சந்திரன். இவரது பெயரை வர்ணனையாளர் கூறியதும்தான், காளையர்கள் தெறித்து ஓடிவிட்டனர்.

    English summary
    Mallampati jallikattu video goes viral as bull tamers ran away after seeing a bull.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X