மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சி.ஏ.ஏ. இருந்திருந்தால் மும்பை தாக்குதலே நடந்திருக்காதாம்...ரவீந்தரநாத் குமார் குபீர் விளக்கம்

Google Oneindia Tamil News

மதுரை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் மட்டும் இருந்திருந்தால் மும்பை தாக்குதலே நடந்திருக்காது என்று அதிமுக எம்.பி ரவீந்தரநாத் குமார் பேசியிருக்கிறார்.

லோக்சபாவில் பாஜகவுக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்து ரவீந்தரநாத் குமார் பேசி வருவது ஒவ்வொரு முறையும் சர்ச்சையாகி வருகிறது. தற்போது சி.ஏ.ஏ.வை ஆதரிக்கிறோம் என்ற போர்வையில் ரவீந்தரநாத் குமார் பேசிய பேச்சு பெரும் நகைப்புக்குரியதாகி உள்ளது.

CAA will stop the terrorists infiltrate to India, says Ravindranath kumar

மதுரை அருகே வாடிப்பட்டியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் ரவீந்தரநாத்குமார் பேசுகையில், குடியுரிமை சட்டம் என்பது அனைத்து நாடுகளில் இருக்கிறது. பாகிஸ்தான், இலங்கை, சிங்கப்பூரிலும் இருக்கிறது.

இந்த தேசத்துக்குள் பயங்கரவாதிகள் அத்துமீறி உள்ளே நுழையாமல் இருக்கவே குடியுரிமை சட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்திருக்கிறார். குடியுரிமை சட்டம் இருந்திருந்தால் காங்கிரஸ் ஆட்சியில் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலே நடந்திருக்காது.

இவ்வாறு ரவீந்தரநாத் குமார் பேசினார்.

அடிக்கலாம்.. அளவு வேண்டாமா?

English summary
AIADMK MP Ravindranath kumar said that CAA will stop the terrorists infiltrate to India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X