மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முறைகேடு புகார்... மதுரை வக்பு வாரிய கல்லூரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரை வக்பு வாரிய கல்லூரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

    மதுரை: மதுரை வக்புவாரிய கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    10 பெண் உதவி பேராசிரியர்களிடம் சிபிஐ ஆய்வாளர் வேலாயுதம் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே, முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, வக்பு வாரிய துறை அமைச்சர் நிலோபர் கபில், செயலாளர் ஜமால் மைதீன் உள்ளிட்ட பலருக்கும் தொடர்புள்ளது என தொடரப்பட்ட வழக்கில் உதவிப்பேராசிரியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    CBI Inquiry at Madurai Wakf Board College

    இந்த வழக்கை சிபிஐ விசாரித்து ஆறு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஆண் பேராசிரியர்களிடம் கடந்த மாதம் சிபிஐ நேரடியாக வரவழைத்து விசாரணை மேற்கொண்டது.

    தற்போது, பெண் பேராசிரியர்களிடம் கல்லூரி வளாகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மதுரை வக்பு வாரிய கல்லூரியில் 2017 ஆம் ஆண்டு 7 பெண் பேராசிரியர், 28 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

    CBI Inquiry at Madurai Wakf Board College

    28 பேராசிரியர் நியமனத்தில் வக்பு வாரியக் கல்லூரி செயலாளராக செயல்பட்டு வரும் ஜமால் மைதீன், வக்பு வாரியத் தலைவர் அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, அப்துல் காதர், அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் உட்பட நிர்வாகத்தில் உள்ளவர்கள் கையூட்டல் பெற்றதாக சர்தார் பாட்ஷா, மகபூப் பாட்ஷா, அலி அக்பர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி பேராசிரியர்களிடம் விசாரனை நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Assistant professors Employment Scam: CBI Inquiry at Madurai Wakf Board College
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X