மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வு இன்னொரு உயிரை பலிவாங்கியிருக்கிறது - டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் சாடல்

மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நெஞ்சம் விம்முகிறது.

Google Oneindia Tamil News

மதுரை: நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தனது மரணத்திற்கு முன்பாக தற்கொலை கடிதம் எழுதியுள்ள மாணவி, உருக்கமாக பேசி வீடியோ, ஆடியோ பதிவு செய்து வைத்துள்ளார். மாணவியின் மரணத்திற்கு அமமுக தலைவர் டிடிவி தினகரன், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

Central government to cancel NEET exam says TTV Dhinakaran, Anbumani ramadoss

டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நீட் தேர்வு அச்சம் இன்னோர் உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நெஞ்சம் விம்முகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த துயரம் தொடருமோ? என்று பதிவிட்டுள்ளார்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

நீட் ஒரு சமூக அநீதி.. அதை முதலில் அழிப்போம்.. உயிர்களை அல்ல.. வைரமுத்து ஆவேசம் நீட் ஒரு சமூக அநீதி.. அதை முதலில் அழிப்போம்.. உயிர்களை அல்ல.. வைரமுத்து ஆவேசம்

Recommended Video

    NEET Exam: தமிழக மாணவர்களின் சதவீதம் சரிவு

    நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் மட்டுமாவது நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும். நீட் ரத்தே தற்கொலைகளுக்கு தீர்வு! என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Madurai student Jyothi Sri Durga committed suicide due to fear of NEET exam has shocked many. AMMK leader TTV Dinakaran and PMK youth team leader Anbumani Ramadas have expressed their condolences on the Twitter page for the death of the student.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X