மதுரை மக்களுக்கு நல்ல சேதி.. எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஆர்டிஐயில் வெளியான சூப்பர் தகவல்
மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1264 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்ததிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய குழு ஒப்புதல் அளித்தது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் எந்த அளவில் இருக்கின்ற எனபது குறித்து மத்திய அரசிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மருத்துவர் லக்ஷ்மணன் என்பவர் கேள்வி கேட்டு இருந்தார்

இதற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை இணைச் அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் மதுரை மாவட்டத்தில் உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக கூறியுள்ளார்.
தலையில் மல்லிகைப்பூ, ஆரஞ்சு கலர் பட்டுபுடவை.. முகத்தில் பூரிப்பு.. மகளுடன் செல்பி.. நளினி ஹேப்பி!
அதற்காக தற்போது நில ஆய்வை, மண்ணின் உறுதித் தன்மை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார். வரும் 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இந்த மருத்துவமனை திட்டத்திற்காக ரூ. 1264 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.