மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏன் விதிகளை வகுக்க கூடாது- நீதிபதி சரமாரி கேள்வி

Google Oneindia Tamil News

மதுரை: அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏன் விதிகளை வகுக்கக் கூடாது என நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி முதல் 9 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Chennai HC Madurai Branch raises so many questions to Jacto Geo

அரசு பல முறை எச்சரிக்கைவிடுத்தும் போராட்டத்தை வாபஸ் பெறாத இவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கடந்த 30-ஆம் தேதி வாபஸ் பெற்றனர். எனினும் ஸ்டிரைக் காலத்தில் ஊதியம் தரப்படமாட்டாது என அரசு அறிவித்துவிட்டது.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

அவர் அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏன் விதிகளை வகுக்க கூடாது. உரிமைக்காக போராடும் அரசு ஊழியர்கள் தங்கள் கடமையிலும் கவனத்தை செலுத்த வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு பி.இ., எம்பிபிஎஸ் படிப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு என்பதை பரிசீலிக்கலாமே. ஸ்டிரைக் நாட்களை விடுப்பு நாட்களாக கருதி ஊழியம் வழங்கலாமே என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசுக்கு ஒரு ரூபாய் வருமானம் வந்தால் அதில் 71 பைசா செலவிடப்படுகிறது என தமிழக அரசு வாதம் செய்தது.

English summary
Chennai HC MAdurai Branch Judge raises so many questions on Jacto Geo strike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X