மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நானும் விவசாயிதான்.. முருங்கைக்காய் விலை எப்படிப்பா.. மதுரையை கலகலக்க வைத்த எடப்பாடியார்!

Google Oneindia Tamil News

மதுரை: திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த முருங்கைக்காயை எடுத்து கடைக்காரரிடம் அதன் விலை என்ன என்று கேட்டு விசாரித்தார்.

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டசபை தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சையில் சிக்கியுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அத்தொகுதியில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி நிர்வாகிகள் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட ஐராவதநல்லுாரில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

கேளுங்க மக்களே, ஸ்டாலின் காங்கிரஸில் சேர போறாராம்.. ராஜேந்திர பாலாஜிக்கு தகவல் வந்துருச்சாம்கேளுங்க மக்களே, ஸ்டாலின் காங்கிரஸில் சேர போறாராம்.. ராஜேந்திர பாலாஜிக்கு தகவல் வந்துருச்சாம்

விலை என்ன?

விலை என்ன?

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் வேனில் இருந்து இறங்கி தெருவிற்குள் இறங்கி நடந்தார். பின்னர் அங்கிருந்த பலசரக்கு கடை கூடையில் வைக்கப்பட்ட முருங்கைக்காயை எடுத்து, கடைக்காரரிடம், விலை என்ன என்றார்.

துண்டு பிரசுரம்

துண்டு பிரசுரம்

இரண்டு நாட்களுக்கு முன் 20 ரூபாயாக இருந்த முருங்கை இப்போது 10 ரூபாய்க்கு வந்துவிட்டது என்றார் கடைக்காரர். 'நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான்' என தெரிவித்து, அவரிடம் ஓட்டுக் கேட்டு துண்டு பிரசுரம் வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

குரூப் போட்டோ

குரூப் போட்டோ

அருகில் இருந்த வீடுகளில் இருந்த பெண்களிடம் ஓட்டுக் கேட்டார். அங்கு குழந்தைகள், பெண்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.

போலீசாருக்கு உத்தரவு

போலீசாருக்கு உத்தரவு

பின்னர் விரகனுார், வளையங்குளத்தில் முதல்வர் பேசும்போது ஆம்புலன்ஸ் வந்தது. அதற்கு வழிவிட போலீசாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.

English summary
Chief Minister Edappadi palanisami enquired about drumstick price in shop at Thiruparankundram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X