மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடுமுறைகள் நாட்களில் மசூதி, சர்ச் திறப்பா? ஹெச். ராஜா பேட்டியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

மதுரை : வெள்ளி, சனி ஞாயிறுகளில் கோவில்களை பூட்டுவதுபோல் மசூதிக்களையும், சர்ச்களையும் மூட தமிழக அரசுக்கு துணிச்சல் உள்ளதா என முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.

இதனிடையே தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், வெள்ளி, சனி ஞாயிறுகளில் கோவில்களை போல் மசூதிக்களையும், சர்ச்களையும் மூட வேண்டும் என்றே உத்தரவிட்டுள்ளதாக திமுகவினர் உள்பட பலர் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்துள்ளனர்.

மதுரை புதூர் பாஜக அலுவலகத்தில் தீனதயாள் உபத்யாயா பிறந்தநாள் விழா கூட்டம் நடந்தது. இதில் கலந்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.

உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது: ஐநாவில் பிரதமர் மோடி சொன்ன நல்ல செய்தி உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது: ஐநாவில் பிரதமர் மோடி சொன்ன நல்ல செய்தி

யார் பொறுப்பு

யார் பொறுப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா பேசும் போது, "கோவில்களில் உள்ள அதிகாரிகள் செயல்படுவதில்லை. சிலைகள் திருடு போவதற்கு பூசாரிகள் பொறுப்பல்ல. ஏனென்றால் அவர்கள் கையில் கோவில் நிர்வாகம் இல்லை. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டிலுள்ள கோயிலில் சிலைகள் திருடு போவதற்கு அவர்களே பொறுப்பு.

கோவில் நிலங்கள்

கோவில் நிலங்கள்

வேதபுரீஸ்வரர் கோவிலில் 20,000 ஏக்கர் நிலங்கள் சர்வே பண்ணாமல் உள்ளது அதை சர்வே செய்வதற்காக புதிதாக நியமிக்கப்பட்ட உடனடியாக மாற்றப்பட்டார். இது போல தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது இன்னும் மீட்கப்படவில்லை. கோயில் நிலங்கள் மீட்கப்படுவதாக கூறப்படும் விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபு பொய் சொல்லுகிறார் .

ஸ்னேக் பாபு

ஸ்னேக் பாபு

தமிழகத்தில் மூத்த அமைச்சர்கள் தங்கள் இலாகாக்களை பற்றி கவலைப்படாமல் செயலாற்றி வருகின்றனர், அமைச்சர் சேகர் பாபு செயல்பாபு என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அவu சேகர் பாபு அல்ல. ஒரு ஸ்நேக் பாபு . , நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லாமல் வளைகாப்புக்கு செல்கிறார்.

ஹெச் ராஜா விமர்சனம்

ஹெச் ராஜா விமர்சனம்

மானிய கோரிக்கையின் போது அமைச்சர்களின் அறிவிப்புகள் அனைத்தும் அதிகாரத்தை மீறிய அறிவிப்புகளாக உள்ளன. ஒரு அரசு மதசார்பற்ற அரசாக இருக்கலாம். ஆனால் இந்து விரோத நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என ஏற்கனவே அறிவிப்பு உள்ள நிலையில் வம்பு செய்கின்ற அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளது. இந்து சமய நிலையத்துறை தொடர்பாக நீதிமன்றம் உத்தரவுகளை நிறைவேற்றாமல் அமைச்சர் சேகர்பாபு உதயநிதிஸ்டாலின் பின்னால் செல்கிறார்.

காவல்துறை

காவல்துறை

இந்து சமய அறநிலையத்துறையை அறநிலையத்துறை என மாற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை வருமானத்தில் கல்லூரி தொடங்கினால், இந்து சமய மத பாடம் கட்டாயம் இருக்க வேண்டும், தமிழ்நாடு காவல்துறை இந்து விரோத போக்கை கடைபிடித்து வருகிறது.

சொத்துக்கள் சூறையாடல்

சொத்துக்கள் சூறையாடல்

கோவில் நகைகள் விற்கப்படுவது இந்து சொத்துக்களை கொள்ளையடிக்ககூடிய செயல். இந்துக் கோயில்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகிறது. அறநிலையத்துறை எதற்கு செயல்படுகிறது என்பது தெரியவில்லை. இஸ்லாமிய படையெடுப்புகளால் அழிக்கப்பட்டதைவிட திமுகவினரின் ஆட்சியில் அழிக்கப்பட்ட கோவில்கள்அதிகம் என்று ஹெச் ராஜா குற்றம்சாட்டினார்.

ஹெச் ராஜா கேள்வி

ஹெச் ராஜா கேள்வி

வெள்ளி, சனி ஞாயிறுகளில் கோவில்களை பூட்டுவதுபோல் மசூதிக்களையும், சர்ச்களையும் மூட தமிழக அரசுக்கு துணிச்சல் உள்ளதா என்றும் முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.

பதிலடி

பதிலடி

இதனிடையே தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், வெள்ளி, சனி ஞாயிறுகளில் கோவில்களை போல் மசூதிக்களையும், சர்ச்களையும் மூட வேண்டும் என்றே உத்தரவிட்டுள்ளதாக பலரும் அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். அனைத்து மத வழிபாட்டு தலங்களும் வெள்ளி சனி ஞாயிறு மூடப்படும்னுதான் அரசு உத்தரவு போட்டுருக்கு. பத்திரிகையாளர்கள் ஒருவர் கூட கேள்வி கேட்கவில்லையே என்று பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

English summary
Churches, mosques are also closed on Fridays, Saturdays and Sundays. Not even one reporter has this knowledge there or hesitant to clarify at that moment? netizens reply to h raja speech about
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X