மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வலையர் நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Google Oneindia Tamil News

மதுரை: முத்தரையர் மக்களின் குரலான வலையர் புனரமைப்பு நல வாரியம் அமைக்க அதிமுக அரசு உதவும் என்றும் கருவில் வளரும் குழந்தை கூட இரட்டை இலையை பிடிக்கும் என வலையர் வாழ்வுரிமை மாநாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Recommended Video

    மதுரை: கருவில் வளரும் குழந்தைக்கு கூட இரட்டை இலை பிடிக்கும்...மாநாட்டில் ஈ.பி.எஸ் பேச்சு!

    மதுரையில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க வலையர் வாழ்வுரிமை மாநாடு மதுரை ஒத்தக்கடை திடலில் நடைபெற்றது . இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் ஆர் பி உதயகுமார்,திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு...மாநாட்டில் பங்கேற்றனர்.

    CM Edappadi Palanisamy says about Valaiyar caste

    வீர முத்தரையர் முன்னேற்றச் சங்க நிறுவனர் கே கே செல்வகுமார் மாநாட்டிற்கு தலைமை வகிக்கிறார். மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாநாட்டில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து சமூகத்தை சார்ந்தவர்கள் வந்த உள்ளனர்.

    முத்தரையர்கள் கலை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியவர்கள். மண்ணையும் மக்களையும் காக்கும் விவசாயிகளாக முத்தரையர்கள் விளங்கியுள்ளனர். நானும் விவசாயி என்பதால் முத்தயர்களோடு இருப்பது பெருமை. வேளாண்மை செழிக்க தேவையான திட்டங்களை செயல்படுத்திவருகிறோம், குடிமராமத்து பணியால் ஒரு சொட்டு நீரை கூட வீணாக்காமல் தடுத்துள்ளோம்.

    காவிரி நீர், முல்லை பெரியாறு நீரை பெற்று தந்தவர் ஜெயல்லிதா. காவிரி டெல்டாவை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளோம். கல்லணை கால்வாய் மேம்படுத்தவுள்ளோம். அரசின் சிறிய முயற்சியால் 7 முறை உணவு தானிய உற்பத்தி 100 மெட்ரிக் டன்னை தாண்டியுள்ளது. இதற்காக மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.

    CM Edappadi Palanisamy says about Valaiyar caste

    சிறுகுறு விவசாய தொழிலாளர்களுக்கு மானியம் வழங்கியுள்ளது. உழவு உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி உற்பத்தி பொருளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். கோழி வளர்ப்பு திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பேரரசர் பெருமுடுகு முத்தரையருக்கு மணிமண்டபங்களை உருவாக்கி பராமரித்து வருகிறது நமது அரசு.

    ஜெயலலிதாவால் பேரரசர் பெருமுடுகு முத்தரையருக்கு சிலை நிறுவியுள்ளோம். திருச்சியில் முழு உருவச்சிலையுடன் கூடிய முத்தரையர் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வலையர்குளம் , ஆனையூர் ஆகிய பகுதிகளில் முத்தரையர் சிலை அமைக்கப்படும். இந்த மாநாடு வரலாற்றில் பதிவு செய்யப்படும்.

    அதிமுக அரசு முத்தரையர்களுக்கு உறுதுணையாக இருக்கும். வேளாண் பணி மூலம் உழைக்கும் வர்க்கும் முத்தரையர் மக்கள்.
    முத்தரையர் சமுதாய மக்கள் போற்றப்பட கூடியவர்கள். குடும்ப அட்டைதாரருக்கு தலா 2500 ரூபாயை வழங்கியுள்ளோம். தமிழகத்தில் அதிக அளவிற்கு கால்நடை மருத்துவமனையை தொடங்கிய அதிமுக அரசு

    சேலத்தில் ஆசியாவிலயே மிகபெரிய கால்நடை பூங்காவை உருவாக்கியுள்ளோம். நானும் ஒரு விவசாயி என்பதால் கால்நடை வளர்த்து வருகிறேன். உடுமலையில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் உருவாக்கியுள்ளோம். மதுரையில் எய்ம்ஸ் அமைவதற்கு அதிமுக அரசு அடித்தளமாக இருந்துள்ளது

    CM Edappadi Palanisamy says about Valaiyar caste

    கருவில் வளரும் குழந்தை கூட இரட்டை இலையை பிடிக்கும். கருவில் உள்ள குழந்தைகளின் நன்மையாக 18ஆயிரம் உதவித்தொகையை வழங்கியுள்ளோம் அதிமுக அரசு. கடந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு பள்ளியில் படித்த 6 மாணவர்களுக்குதான் இடம் கிடைத்தது.

    நான் அரசுப் பள்ளியில் படித்ததால் இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றிபெற்ற 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்கியதால் இந்த ஆண்டு 435பேர் மருத்துவ மாணவர்களாக உருவாகியுள்ளனர். ஏழை மாணவர்களின் கனவு நிறைவேறியுள்ளது. ஏழை மக்கள் வாழும் பகுதியை தேர்வுசெய்து அந்த பகுதிகளில் அம்மா மினி கிளீனிக் கொண்டு வந்துள்ளோம்.

    ஒவ்வொரு அம்மா மினி கிளினிக்கிலும் ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். உழைப்பாளி சமுகமான முத்தரையர் சமூகத்திற்கு என்னுடைய அரசு உறுதுணையாக நிற்கும். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது முத்தரையர் சமூகத்தினர் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

    முத்தரையர் மக்களின் குரலான வலையர் புனரமைப்பு நல வாரியம் அமைக்க அம்மா அரசு உதவும். மக்கள் நலன் உள்ள அரசு அம்மாவின் அரசு, கருவில் வளரும் குழந்தை கூட இரட்டை இலையை உயர்த்தி பிடிக்கும் என்று கூறினார்.

    English summary
    CM Edappadi Palanisamy says that his government will form Valaiyar reconstruction board.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X