மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி ட்விட்டர் அக்கவுன்ட்டுக்கு பதிலாக 33 சதவீத இடஒதுக்கீடு பரிசாக வழங்கலாமே.. புதுவை முதல்வர்

Google Oneindia Tamil News

மதுரை: உலக மகளிர் தின பரிசாக பிரதமர் நரேந்திர மோடி மகளிர்க்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கினால் நன்றாக இருக்கும் என மதுரையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

Recommended Video

    #SheInspiresUs: Pm modi announcement for women | எனது சமூக வலைதள பக்கங்களை... பெண்களே நிர்வகிக்கலாம் - மோடி

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வந்திருந்தார். அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் புதுச்சேரி சட்டமன்றத்தில் சிஏஏ க்கு எதிராக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியது போன்று இஸ்லாமிய மக்கள் அதிகம் உள்ள தமிழ்நாட்டிலும் நிறைவேற்ற முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும்.

    CM Narayanasamy says that 33% reservation for Women will be given

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தை பெண்கள் இன்று ஒரு நாள் மட்டும் மகளிர் தினத்தை முன்னிட்டு பயன்படுத்தலாம் என்று கொடுத்த அனுமதிக்கு பதிலாக நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு மகளிர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மகளிர் தின பரிசாக கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    துணைநிலை ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும்.

    பொருளாதார வல்லுனர்கள் வைத்து பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யாமல், மருத்துவ வல்லுநர்கள் மூலம் கரோனா வைரஸை கட்டுப்படுத்ததாமல் பேசியே நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்றார்.

    English summary
    Puducherry CM Narayanasamy says that 33% reservation for Women will be given. Its a long lasting demand by women.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X