மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்கள் கழுத்துல நகையை பார்த்தா போதும்.. டூட்டி கட்ட சொல்றாங்க... மதுரை ஏர்போர்ட் மீது புகார்

மதுரை ஏர்போர்ட் சுங்கத்துறை அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

மதுரை: "மதுரை தானே என்று நம்பி துபாயில் இருந்து கிளம்பி போனேன்.. ஆனால், மதுரை ஏர்போர்ட்டில் சோதனை என்ற பெயரில் படாதபாடு படுத்தி விடுகிறார்கள், அதுவும் தங்க நகை போட்டு பெண்கள் வந்தாலேபோதும்.. அவர்களை டூட்டி கட்டுங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள்.. " என்று துபாய்வாசி ஒருவர் மதுரை சுங்கத்துறை அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டி உள்ளார்.

துபாயில் இருந்து மதுரை ஏர்போர்ட்டுக்கு தனியார் நிறுவனம் ஒன்று நேரடி விமான சேவையை மேற்கொண்டு வருகிறது. தனி ஃபிளைட் என்பதால், மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அதில் செல்ல அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Complaint against madurai airport customs officials

ஆனால், துபாயில் இருந்து வரும் பெண்களை மட்டும் இந்த மதுரை ஏர்போர்ட்டில் நிறைய சோதனை செய்கிறார்களாம்.. ஏகப்பட்ட கெடுபிடிகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.. துபாயில் இருந்து தங்க நகை போட்டுக் கொண்டு வந்தால், சோதனை இன்னும் மோசமாகி விடுகிறதாம்.. அலைக்கழித்து விடுகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த வாரம் துபாய்வாசி ஒருவர் மதுரை சென்று விட்டு, நாடு திரும்பி உள்ளார்... அப்போது, அவரது நகைகளை சோதனையிட்டு டூட்டி கட்டுங்கள் என்று சொல்லி விட்டார்களாம்.. இதே துபாயில்தான் ரொம்ப வருஷமாக இருக்கிறோம் என்று சொல்லியும் அதிகாரிகள் கேட்கவில்லையாம்.. பிறகு அந்த பயணியிடம் லஞ்சமாக 500 திர்ஹாத் வாங்கி கொண்டு, அதற்குபிறகுதான் அவரை வீட்டுக்கு செல்ல அனுமதித்துள்ளனர்.

இதுபற்றி அந்த நபர் சொல்லும்போது, "இதுவரை நான் துபாயில் இருந்து திருவனந்தபுரம் ஏர்போர்ட்டுக்கு மட்டுமே போய் வந்தேன். கேரளாவில் அந்த ஏர்போர்ட் இருந்தாலும், நான் நகை போட்டு சென்றாலும் இதுவரை இப்படி சோதனை என்ற பெயரில் துன்புறுத்தியதில்லை. ஆனால் அவசரமாக போக வேண்டும் என்பதற்காக மதுரை ஏர்போர்ட்டுக்கு போகலாம் என்று நினைத்தேன்.

அப்படி நான் போகும்போது, மதுரை ஏர்போர்ட்டில் சோதனை என்று கூறி அளவுக்கு அதிகமாக துன்புறுத்தி விட்டார்கள்... இது எனக்கு வருத்தமாக உள்ளது... என்னை போலவே பலரும் இப்படி பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெண்களை சோதனை என்ற பெயரில் துன்புறுத்தி வரும் மதுரை ஏர்போர்ட்டில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் மீது தேவையான நடவடிக்கை எடுத்தால் நல்லா இருக்கும்" என்று வேதனை கலந்த தொனியில் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

English summary
Complaint against madurai airport customs officials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X