மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க பரிசீலனை.. அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

Google Oneindia Tamil News

மதுரை: ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க பரிசீலனை நடைபெற்று வருகிறது என பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.

Recommended Video

    மதுரை: சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு ‘லக்கி’ சான்ஸ்.. அரசு வேலையில் முன்னுரிமை…?

    தைப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட மதுரையை சுற்றி உள்ள பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக நடத்தப்படும். அந்த வகையில் நேற்று முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நடந்தது. இதில், 430 வீரர்ர்களும், 788 காளைகளும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

    Consideration to provide government jobs to the best jallikattu players : Minister RP Udayakumar

    நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் பார்வையிட்டனர்.

    இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு கார் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டாலும்,. அவர்களுக்கு அரசுப் பணி வழங்கவேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது. அதனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், 'மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் அதற்கான முடிவை அறிவிப்பார்' என்று தெரிவித்தார்.

    English summary
    Minister RP Udayakumar said tamilnadu govt now Consideration to provide government jobs to the best jallikattu players.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X