மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டாக்டர்கள் பஞ்சு திருடுறாங்க.. மருந்து திருடுறாங்க" வீடியோ போட்ட மாரிதாஸ்.. போலீஸில் சரமாரி புகார்

அரசு டாக்டர்கள் குறித்து சர்ச்சை வீடியோ குறித்து மாரிதாஸ் மீது புகார் தரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

மதுரை: "இந்த டாக்டர்கள் பஞ்சை திருடிக்கிட்டு போயிடுறான்... மருந்தை திருடிக்கிட்டு போயிடுறான்... 60 வருஷமாக இது நடக்கிறது.. அரசு ஆஸ்பத்திரிகள் எதுவும் சரியாக செயல்படுவதில்லை.. இந்த அரசு ஆஸ்பத்திரிகளை மூடிவிட்டு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அரசு நிதி அளிக்க வேண்டும்" என்று மாரிதாஸ் வீடியோ வெளியிட்ட விவகாரம் இப்போது வரை பற்றி கொண்டு எரிகிறது.. மதுரை கமிஷனர் ஆபீஸிலும் கட்சியினர் அவர் மீது புகார் மனு அளித்துள்ளனர்.

தொடர்ந்து எதை பத்தியாவது, யாரை பத்தியாவது அவதூறுகளை பேசி பரபரப்பை கிளப்புபவர்களில் ஒருவர் மாரிதாஸ்.. கொஞ்ச நாளைக்கு முன்பு கூட, ஊடகவியலாளர்களை அவதூறாக சித்தரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இது சம்பந்தமான கேஸ் ஹைகோர்டில் உள்ளது.. இனி பொய் தகவலோடு வீடியோ வெளியிடக்கூடாது என்று கோர்ட் ஏற்கனவே வார்ன் செய்துள்ளது.. ஆனாலும் மாரிதாஸ் தன் போக்கை நிறுத்தி கொள்ளவில்லை.

டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி.. அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி.. அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார்

வீடியோ

வீடியோ

அந்த பிரச்சனை முடிவதற்குள் இன்னொரு வீடியோவை போட்டு பரபரப்பை கிளப்பிவிட்டார்.. மருத்துவர்களை அவதூறாக பேசி அந்த வீடியோவை போட்டிருந்தார்.. அதில், "அரசு 15,000 கோடி வரை மருத்துவ செலவிற்காக செய்து வருகின்றது... அவற்றால் மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை.. அரசிடம் இருந்து கிடைக்கும் பொருட்களை அரசு ஊழியர்களே கொள்ளையடித்து செல்கின்றனர்.

 துப்பாக்கி முனை

துப்பாக்கி முனை

அரசு ஊழியர்களுக்கு தேசப்பற்று துளிகூட இல்லை.. அரசு ஊழியர்கள் அரசிடம் துப்பாக்கி முனையில் வைத்து பணத்தை பறித்து செல்கிறார்கள்.. அரசு டாக்டர்கள் பஞ்சை திருடிக்கிட்டு போயிடுறான்... மருந்தை திருடிக் கொண்டு போயிடுறான்... 60 வருஷமாக இது நடக்கிறது.. அரசு ஆஸ்பத்திரிகள் எதுவும் சரியாக செயல்படுவதில்லை.. இந்த அரசு ஆஸ்பத்திரிகளை மூடிவிட்டு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அரசு நிதி அளிக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட பல அவதூறுகளை மாரிதாஸ் தெரிவித்திருந்தார்.

 புகார்

புகார்

இதற்கு டாக்டர்கள் சங்கமும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. "இப்படி ஒட்டு மொத்த அரசு டாக்டர்களையும் இழிவு படுத்தும் மாரிதாஸை உடனடியாக தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியிருந்தது.

 குவியும் புகார்

குவியும் புகார்

இப்போது மதுரை கமிஷனர் அலுவலகத்திலும் அவர் மீது கட்சிகள் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.. "மாரிதாஸ் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.. அவர் மீது வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் மனு தரப்பட்டுள்ளது... இப்படி நாளுக்கு நாள் மாரிதாஸ் மீது புகார்கள் குவிந்து வருகின்றன.. மேலும், மத்திய ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ளதால் மற்றவர்களை தொடர்ந்து அவர் குறை கூறுவதாககருத்துக்களும் எழுந்து வருகின்றன!

English summary
controversy video: gov doctors and parties complaint against maridhas
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X