மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராமேஸ்வரத்தில் சீனப் பெண்.. கொரோனா பீதி.. சென்னைக்கு உடனே அனுப்பி வைத்த அதிகாரிகள்!

Google Oneindia Tamil News

மதுரை: ராமேஸ்வரத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணமாக வந்த சீன பெண்ணை கொரோனா பரிசோதனைக்காக நேற்று சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் இதுவரை 1800 பேரை பலி கொண்டுள்ளது. சுமார் 70 ஆயிரம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா பரவி வருகிறது.

coronavirus : china women send to chennai after she visit rameshwaram

இதையடுத்து உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை தடுக்க பல்வேறு நாடுகளும், சீனாவில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. பல நாடுகள் சீன பயணிகளுக்கு தற்காலிமாக தடை விதித்துள்ளன.

இந்தியாவும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் சீனாவில் இருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இணையதளம் மூலம் விசா தரும் முறையை தற்காலிமாக ரத்து செய்துள்ளது.

எனினும் சீனாவை சேர்ந்த ஜியாஞ்சுன் (48) என்ற பெண் கடந்த ஜனவரி 21-ஆம் தேதியே கொல்கத்தா வந்துள்ளார். அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு ஆன்மிக பயணம் சென்றுள்ளர். நேற்று இரவு ராமேஸ்வரத்திற்கு வந்த அவர் ராமநாதசுவாமி கோயில் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். இது குறித் தனியார் விடுதி நிர்வாகிகள் ராமேஸ்வரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

உங்க அருகில் கொரோனா வைரஸ் உள்ளவரை கண்டுபிடிப்பது எப்படி? சீனா வெளியிட்ட சர்ச்சை ஆப் உங்க அருகில் கொரோனா வைரஸ் உள்ளவரை கண்டுபிடிப்பது எப்படி? சீனா வெளியிட்ட சர்ச்சை ஆப்

இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வந்து சீன பயணியிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் அடுத்தகட்ட பரிசோதனைக்காக ராமேஸ்வரத்தில் இருந்து தனி வாகனம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார். சென்னையில் சீனப்பயணிக்கு கொரோனா மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது..

English summary
coronavirus fear: china women send to chennai by flight after she visit rameshwaram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X