மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுக்கடையில் கூடிய மதுரையன்ஸ்.. ஒரே நாளில் அதிக வருமானம்.. டாஸ்மாக் வசூலில் சாதனை.. முழு லிஸ்ட்!

Google Oneindia Tamil News

தமிழகத்தில் நேற்று மற்ற மாவட்டங்களை விட மதுரையில்தான் மிக அதிகமாக டாஸ்மாக் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    எந்த பகுதியில் எவ்வளவு மது விற்பனை? முழு தகவல்

    மதுரை: தமிழகத்தில் நேற்று மற்ற மாவட்டங்களை விட மதுரையில்தான் மிக அதிகமாக டாஸ்மாக் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நேற்று ஒரு நாள் டாஸ்மாக் வருமானம் 170 கோடி ரூபாய் என்று டாஸ்மாக் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்த்ததை விட இது அதிக வருமானம் என்று கூறுகிறார்கள்.தமிழகத்தில் நேற்று அனைத்து மண்டலங்களிலும் மதுபான கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.

    டாஸ்மாக் திறப்பு : ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? தாங்குமாதமிழகம்? கமல்ஹாசன்டாஸ்மாக் திறப்பு : ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? தாங்குமாதமிழகம்? கமல்ஹாசன்

    40 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இப்படி டாஸ்மாக் திறக்கப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மக்கள் கூட்டம்

    மக்கள் கூட்டம்

    நேற்று மக்கள் கூட்டம் கூட்டமாக டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கினார்கள். மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் கூட்டமாக சென்று மது வாங்கினார்கள். இப்படி பலர் கூட்டமாக சென்றதால் சில இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த கூட முடியவில்லை. தமிழகத்தில் மொத்தம் 5146 டாஸ்மாக் கடைகள் உள்ளது. ஆனால் நேற்று வெறும் 3750 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது.

    மதுரை நிலை

    மதுரை நிலை

    அதிகபட்சமாக மதுரையில் ரூ. 45.67 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரையில் தற்போது 112 பேருக்கு கொரோனா உள்ளது. ஆனால் அதையும் மீறி மதுரையில் அதிக அளவில் மக்கள் மது வாங்கி உள்ளனர். பொதுவாக பண்டிகை நாட்களில் சென்னையில் அதிகமாக மது விற்பனை ஆகும். மதுரை இரண்டாம் இடம் பிடிக்கும். சென்னையில் இந்த முறை மது விற்பனை இல்லாததால் மதுரை முதல் இடம் பிடித்துள்ளது.

    சென்னைக்கு வெளியே

    சென்னைக்கு வெளியே

    மதுரைக்கு அடுத்து சென்னைக்கு வெளியில் புறநகர் பகுதியில் ரூ.42 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. அதாவது செங்கல்பட்டில் வரும் பகுதிகளில் மட்டும் இத்தனை கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து இங்கு மக்கள் தொகை அதிக அளவில் உள்ளது. இதனால் இங்கு விற்பனை அதிகம் உள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    சேலம் நிலை

    சேலம் நிலை

    சேலம் மண்டலத்தில் ரூ.41 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடியும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பெரிய நகரங்களில் எல்லாம் அதிக அளவில் மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. பண்டிகை அல்லாத ஒரு நாளில் இவ்வளவு பெரிய வசூல் வருவது இதுவே முதல்முறையாகும். தமிழகத்தில் இது புது ரெக்கார்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Coronavirus: Districtwise first-day collection details of Tasmac in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X