மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாய்லாந்து பயணிகளுக்கு கொரோனா இல்லை.. பலியான மதுரை நபர் பாதிக்கப்பட்டது எப்படி? தொடரும் மர்மம்

தமிழகத்தில் மதுரையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்கு முன் பலியானார்.

Google Oneindia Tamil News

மதுரை: தமிழகத்தில் மதுரையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்கு முன் பலியானார். இவருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது என்பதில் இன்னும் பல மர்மங்கள் நீடித்து வருகிறது. இவருக்கு எப்படி கொரோனா வைரஸ் ஏற்பட்டது, யார் மூலம் இவருக்கு வைரஸ் பரவியது என்பதில் இன்னும் குழப்பங்கள் நிலவி வருகிறது .

ஸ்டேஜ் 3 கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் வந்துவிட்டதா என்பதுதான் இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. சில மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் இந்தியாவில் ஸ்டேஜ் 3 கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிட்டது என்று கூறுகிறார்கள்.

ஆனால் இன்னும் ஸ்டேஜ் 3 ஏற்படவில்லை என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் ஸ்டேஜ் 3 ஏற்படவில்லை என்று தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

இளவரசர்.. பிரதமர்.. அடுத்து?.. லண்டனை கலங்கடிக்கும் கொரோனா.. அலட்சியத்திற்கு 'போரிஸ்' கொடுத்த விலை இளவரசர்.. பிரதமர்.. அடுத்து?.. லண்டனை கலங்கடிக்கும் கொரோனா.. அலட்சியத்திற்கு 'போரிஸ்' கொடுத்த விலை

தமிழகம் எத்தனை

தமிழகம் எத்தனை

தமிழகத்தில் மொத்தம் 40 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே மதுரையில் ஒருவர் பலியாகிவிட்டார். தற்போது இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்தும், அவரின் மரணம் குறித்தும் நிறைய கேள்விகள், சந்தேகங்கள் எழுந்துள்ளது. மதுரையில் ஒருவருக்கு கடந்த 23ம் தேதி கொரோனா ஏற்பட்டது. 54 வயது நிரம்பிய இவருக்கு மதுரையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எப்படி வந்தது

எப்படி வந்தது

இவருக்கு கொரோனா ஏற்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. பல்வேறு சந்தேகங்களை இந்த நபரின் மரணம் எழுப்பி இருக்கிறது. மதுரையில் கொரோனா வந்து பலியான இந்த நபர், இந்த வருடம் எங்கும் வெளிநாடு செல்லவில்லை. இந்த வருட தொடக்கத்தில் இருந்து வெளிமாநிலம் எதற்கும் செல்லவில்லை. 54 வயது நிரம்பிய இவர் வீட்டில்தான் இருந்துள்ளார்.

எப்படி

எப்படி

மதுரையில் மட்டும் வெளியே தினசரி வேலைகளுக்கு சென்றுள்ளார். ஆனால் இப்படி எந்த விதமான பயண வரலாறும் இல்லாமல் இருக்கும் இவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் பல இடங்களுக்கு இவர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். கடந்த நவம்பரில் கூட இவர் வெளிநாடு சென்றுவிட்டு திரும்பி இருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் காய்ச்சல் இல்லை. இதனால் இவருக்கு எப்படி திடீர் என்று கொரோனா வந்தது என்று சந்தேகம் எழுந்தது.

தாய்லாந்து

தாய்லாந்து

இந்த நிலையில்தான் மதுரை வந்த தாய்லாந்து பயணிகளை இவர் சந்தித்தார் என்று செய்திகள் வெளியானது. அவர்கள் மூலம் இவருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. இதனால் அந்த 8 தாய்லாந்து பயணிகளுக்கும் தனியாக கொரோனா சோதனை செய்யப்பட்டது. மதுரை தோப்பூரில் வைத்து இந்த 8 பயணிகளுக்கும் சோதனை செய்யப்பட்டது. நேற்று வந்த விசாரணை சோதனை முடிவுகளின் அடிப்படையில் 8 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று உறுதியாகி உள்ளது.

மூன்று விஷயமும் இல்லை

மூன்று விஷயமும் இல்லை

இதனால் இவர் கடந்த டிசம்பரில் இருந்து வெளிநாடு எங்கும் செல்லவில்லை. அதேபோல் தாய்லாந்து நபர்கள் மூலமும் கொரோனா பரவவில்லை. அதேபோல் அண்டை மாநிலங்கள் எதற்கும் செல்லவில்லை. இப்படி மூன்று சந்தேகமான இருந்த விஷயங்கள் எதன் மூலமும் இவருக்கு கொரோனா பரவவில்லை. அப்படி இருக்கையில் இவருக்கு யாரிடம் இருந்து கொரோனா பரவியது என்ற கேள்விக்கு மட்டும்.. இன்னும் விடை கிடைக்கவில்லை. ஒருவேளை தமிழகத்தில் ஸ்டேஜ் 3 ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.

English summary
Coronavirus: How did a Madurai guy get the COVID-19? An unanswered question in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X