மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கழிப்பறையிலும் ஆக்சிஜன் வசதி.. கொரோனாவை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக கழிப்பறைகளில் ஆக்ஸிஜன் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக கழிப்பறைகளில் ஆக்ஸிஜன் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு திடீர் என்று உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது அதிகரித்து வருகிறது. அதிலும் பலருக்கு அதிகாலை நேரங்களில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. ஹைபாக்சியா எனப்படும் இந்த பாதிப்பு காரணமாக பலர் இறப்பதும் வழக்கமாகி வருகிறது.

Coronavirus: Madurai Rajaji hospital puts oxygen tubes inside the restrooms too

அதேபோல் பொதுவாக கொரோனா நோயாளிகள் கழிப்பறை செல்லும் போது அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைவது வழக்கமாகி வருகிறது. இதனால் அவர்கள் உள்ளேயே மயக்க மடைகிறார்கள்.

இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக கழிப்பறைகளில் ஆக்ஸிஜன் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மிதமான மற்றும் அறிகுறி இல்லாத நோயாளிகள் கழிப்பறைக்கு செல்லும் போது மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.

கழிவறைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ்.. சீனாவில் காலியான குடியிருப்பில் கண்டுபிடிப்புகழிவறைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ்.. சீனாவில் காலியான குடியிருப்பில் கண்டுபிடிப்பு

இதை தடுக்கும் வகையில் உள்ளேயே ஆக்சிஜன் குழாய்கள் வைக்கப்பட்டு உள்ளது. கழிப்பறை வாசலிலும், உள்ளேயும் குழாய் பொருத்தப்பட்டு இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. கழிவறையில் ஆக்சிஜன் குறைந்து மூச்சு திணறல் ஏற்பட்டது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்களின் இந்த முடிவு மக்கள் இடையே பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.

English summary
Coronavirus: Madurai Rajaji hospital puts oxygen tubes inside the restrooms too for patients.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X