மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ்.. மதுரை போலீஸ் எடுத்த முக்கிய முடிவு.. பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்

Google Oneindia Tamil News

மதுரை: கொரோனா பரவலை தவிர்ப்பதற்கு டிராபிக் போலீசாருக்கு முக்கியமான அறிவுறுத்தலை வழங்கியுள்ளோம் என்ற தகவலை மதுரை மாநகர் காவல்துறை ஆணையர் மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குனர் டேவிட்சன் தேவசிர்வாதம் தெரிவித்தார்.

Recommended Video

    கொரோனா வைரஸ்.. மதுரை போலீஸ் எடுத்த முக்கிய முடிவு.. பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்

    மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து டேவிட்சன் தேவாசிர்வாதம் பேசியதை பாருங்கள்:

    காவல்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் மதுரையில் சாலை பாதுகாப்பை மேம்படுத்த நவீன சிக்னல் விளக்குகள், 1 லட்சம் முகமூடிகள் அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    ரோந்து

    ரோந்து

    மாநகரில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அதிக பாரம் ஏற்றகூடாது.., சிக்னல்களை முறையாக பின்பற்றுதல், வேகக்கட்டுப்பாடு போன்றவை குறித்து விழிப்புணர்வு அளித்து விளக்கவேண்டும். மதுரையில் CAAக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது தற்போதுவரையில் 37 வழக்குகள் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுரை மாநகர் முழுவதும் 5 டெல்டா ரோந்து வாகனம் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

    செயின் பறிப்பு குறைப்பு

    செயின் பறிப்பு குறைப்பு

    பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் குற்றங்களை கட்டுப்படுத்த பள்ளி கல்லூரி மாணவிகளுக்கும் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. காவல்நிலையத்தில் காவலர்கள் இல்லாத போதும் வாங்க மனுக்களை பெற அனைத்து காவல்நிலையத்திலும் வரவேற்பாளர் நியமிக்கப்பட்டு பெற்று வருகின்றனர். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய சிறுவர்கள் அருகாமையில் இருக்கும் சமூக விரோதிகளுடன் சேர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை வகைப்படுத்தி கற்றலை மீட்டெடுக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. முழுமையாக குற்றங்களை குறைத்து விடுவது சாத்தியமற்றது, தொடர்ந்து குற்றங்கள் குறைத்து வருகின்றோம். குறிப்பாக காவல்துறை நடைவடிக்கைகள் மூலம் மதுரையில் 50 சதவீதம் செயின் பறிப்பு குறைக்கப்பட்டுள்ளது.

    ஊத வேண்டாம்

    ஊத வேண்டாம்

    மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தவிர்ப்பதற்கு மது அருந்தியவர்களை ஊதச் சொல்வது அவசியம் இல்லை என்ற அனைத்து காவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதற்கான மது அருந்தியவர்களை கண்டுபிடிப்பதற்கான மாற்று வழிமுறைகள் குறித்து ஆலோசித்து வருகின்றோம்.

    பரவும் வாய்ப்பு

    பரவும் வாய்ப்பு

    கொரானோ குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு காவல்துறை சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஒருவர் பயன்படுத்திய மிஷினில் மற்றொருவர் ஊதும்பட்சத்தில், கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளது. இந்த நடைமுறையை, கைவிடுவதாக காவல்துறை தெரிவித்துள்ளதால், வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    English summary
    Madurai traffic police no need to use alcohol breath analysers due to corona scare, says officials.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X