மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா: மதுரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - ஒரே நாளில் 929 பேர் வீடு திரும்பினர்

மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மோசமான அளவு அதிகரித்து வந்தது. இந்நிலையில் குணமடையும் நபர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்து வருகின்றது. ஒரேநாளில் 929 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மோசமான அளவு அதிகரித்து வந்தது. இந்நிலையில் குணமடையும் நபர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்து வருகின்றது. ஒரேநாளில் 929 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் 220 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5977 பேராக உயர்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் முழு லாக்டவுன் அமல் படுத்தப்பட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாலும் கொரோனா கட்டுப்பட்டது போல தெரியவில்லை. நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகரித்து 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தொட்டது கொரோனா. அதே நேரத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை திருப்தி அளிக்கும் வகையில் உயராமல் இருந்தது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

Coronavirus: Recovery rate rises in Madurai

டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையில் மதுரை 4வது இடத்தில் உள்ளது. 24.6 சதவிகிதம் பேர்தான் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதே போல சென்னையை அடுத்து மதுரையிலும் கொரோனாவில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகவே மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

நேற்று ஒரே நாளில் மதுரையில் கொரோனா பாதிப்பில் இருந்து 929 பேர் மீண்டுள்ளனர் என்ற தகவல் மதுரை மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்பதும், கொரோனா முகாம், வீட்டுத்தனிமை, மருத்துவமனை சிகிச்சையில் இருந்தவர்கள் குணமடைந்துள்ளனர். முகாம், வீட்டுத்தனிமை, மருத்துவமனை சிகிச்சையில் இருந்தவர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, கோவை உட்பட பல மாவட்ட எஸ்.பி.க்கள் டிரான்ஸ்பர்.. மொத்தம் 51 ஐபிஎஸ் அதிகாரிகள்.. அரசு அதிரடி மதுரை, கோவை உட்பட பல மாவட்ட எஸ்.பி.க்கள் டிரான்ஸ்பர்.. மொத்தம் 51 ஐபிஎஸ் அதிகாரிகள்.. அரசு அதிரடி

மதுரையில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2179 ஆக உயர்ந்துள்ளது. நோய் பரவும் வேகத்தைத் தடுக்க வீடு வீடாக காய்ச்சல் கண்டறியும் குழு, தொடர்பு கண்டறியும் குழு மற்றும் கிருமி நாசினி குழு ஆகிய மூன்று வகை குழுக்களை மதுரை மாநகராட்சி அமைத்துள்ளது. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் வீடு, வீடாக காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா தொற்று கண்டறியும் குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

Recommended Video

    Corona Medicine : 'அவசரகால பயன்பாட்டிற்காக' Itolizumab மருந்து | Oneindia Tamil

    மதுரையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 220 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5977 பேராக உயர்ந்துள்ளது.

    English summary
    Madurai district on Saturday saw 929 Covid-19 patients either being discharged from hospitals and home.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X