"ஆர்எஸ்எஸ்".. மோடிக்கு என்ன வக்காலத்து.. மதுரையில் கொந்தளித்த பாலகிருஷ்ணன்.. கடுப்பான ஆதீனம்
மதுரை: பிரதமர் மோடிக்கு வக்காலத்து வாங்குபவர்களாக ஆதீனங்கள் மாறிவிட்டனர்.. ஆர்எஸ்எஸ் கூடாரமாக ஆதீனங்கள் மாறக்கூடாது என்று சிபிஎம் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை துறவிகள் மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது.. இந்த மாநாட்டில், மதுரை ஆதீனம் பங்கேற்றார். பல முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
5 நாட்கள்.. 5 சம்பவம்! சல்லி சல்லியாக நொறுக்கிட்டீங்களே! அடித்து சொன்ன அதிமுக.. விக்கித்து போன பாஜக!
2 நேற்று முன்தினம் அளித்த ஒரு பேட்டியானது, அதிர்வலையை உண்டாக்கி வருகிறது.. அவர் பேசும்போது, "தமிழ்நாட்டில் பண்பாடு கலாச்சாரமே கோவிலுக்குள் தான் உள்ளது. ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என்று சொல்கிறார்.

துறவியர்கள்
நாங்கள் அரசியல் பேசாமல் வேறு யாரு பேசுவது? முதலில் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை..? இந்துசமய அறநிலையத்துறை கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள். அந்த பணம் முழுவதும் கோவிலுக்கு செல்வதில்லை.. இந்துக்களை பாதுகாக்க அனைத்து ஆதீனங்களும் துறவியர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். அரசியல்வாதிகள்தான் கோவில்களில் தக்கார்களாக உள்ளனர். இதனால் கோவில்களுக்குள்ளும் அரசியல் புகுந்து விட்டது. கோவில்கள் அரசியல்வாதிகளின் கொள்ளைக்கூடாரமாக மாறிவிட்டது என்று கடுமையாக பேசியிருந்தார்.

பாலகிருஷ்ணன்
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் கூடாரமாக ஆதீனங்கள் மாறக்கூடாது, கோவில்களை ஏன் ஆதீனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆதினங்கள் அரசியல் பேசுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் முஸ்லிம்கள் தேச விரோதிகள் என்று பேசுவது எந்த வகையில் நியாயம்?

சிதம்பர நடராஜர்
கோயிலில் அறநிலைத்துறை கொள்ளையடிக்கிறது. அங்கு தவறு நடக்கிறது என்பதெல்லாம் வரம்பு மீறிய பேச்சு.. ஒரு கோவில் எப்படி தீட்டிதர்களுக்கு சொந்தமாக முடியும்? அது மக்களுக்கு தான் சொந்தம்? சிதம்பர நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாடில் கொண்டு வர வேண்டும்.. ஆதீனங்கள் ஆன்மீக பணியை மட்டும் தான் செய்ய வேண்டும். கோவில்களை ஏன் ஆதீனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

வவ்வால்
பிரதமர் மோடிக்கு வக்காலத்து வாங்குபவர்களாக ஆதினங்கள் மாறிவிட்டனர்.. ஒரு தலைபட்சமாக அவர்கள் பேசி வருகிறார்கள்.. ஆதினங்கள் கட்டுப்பாட்டில் இருந்த போது ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளன.. அதனால், ஆர்எஸ்எஸ் கூடாரமாக ஆதீனங்கள் மாறக்கூடாது.. " என்றார் பாலகிருஷ்ணன்... முன்னதாக, வவ்வாலாக பிறப்பீர்கள் என்று சாபம் விடுவது, விஜய் படத்தை பார்க்காதீர்கள் என்று பல்வேறு கருத்துக்களை ஆதீனம் சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.