மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலைக்கு போக முடியாத பக்தர்களே... இங்கேயும் நெய் அபிஷேகம் ஐயப்பனுக்கு செய்யலாம்

சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க முடியவில்லையே என்று தவிக்கும் பக்தர்களுக்கு இருமுடி செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்ய முடியாத ஐயப்ப பக்தர்கள் இருமுடி செலுத்துவதற்கு வசதியாக மதுரை கள்ளந்திரி சாஸ்தா முதியோர் இல்ல வளாகத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மாநில தலைவர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் மண்டல மகர விளக்கு விழா காலங்களில் சபரிமலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும், ஸ்டெச்சர் சர்வீஸ், புண்ணிய பூங்காவனம் சேவைகளும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

Devotees who cannot go to Sabarimala ... Ghee abishegam for Ayappan

இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட அமைப்புகள் வேண்டுகோளின்படி சபரிமலை யாத்திரை செல்ல முடியாதவர்கள் இருமுடி செலுத்துவதற்கு வசதியாக மதுரை கள்ளந்திரி சாஸ்தா முதியோர் இல்ல வளாகத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க தினசரி 10ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பார்களா?சபரிமலை ஐயப்பனை தரிசிக்க தினசரி 10ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பார்களா?

அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குழுவாக வருபவர்கள் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதற்கான ஏற்பாடுகளை அகில பாரத ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில தலைவர் விஸ்வநாதன், செயலாளர் ஐயப்பன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மத்திய, மாநில மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

English summary
Special arrangements have been made for the anointing of ghee at the Ayyappan temple in the premises of the Madurai Kalandiri Shasta old Home for the convenience of Ayyappa devotees who are unable to visit Sabarimala and pay homage to Ayyappan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X