மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தமிழக அரசு மேல்முறையீடு!

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதான நபர் விடுதலையானதை எதிர்த்து, தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீடு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதான நபர் விடுதலையானதை எதிர்த்து, தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீடு செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடம் குரும்பட்டியில் முடிதிருத்தும் கடை நடத்தும் வெங்கடாசலம், லட்சுமி தம்பதியரின் மகள் கலைவாணி. கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி சிறுமியின் எதிர் வீட்டில் வசிக்கும் கிருபானந்தன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததோடு மயக்கமாக இருந்த சிறுமியை மின்சார வயரை மூக்கிலும் வாயிலும் செலுத்தி மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்துள்ளார்.

Dindigul girl murder case: Tamil Nadu government appeals in HC bench

வடமதுரை காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து கிருபானந்தனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த செப்டம்பர் 29 வெளிவந்தது, சாட்சிகள் கலைக்கப்பட்டு கிருபானந்தன் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டான். இந்த தீர்ப்பு கலைவாணியின் பெற்றோர்கள், உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடாமல் கொலையாளிக்குத் தூக்குத் தண்டனையோ, ஆயுள் தண்டனையோ கிடைக்கின்ற வகையில் தண்டிக்கப்பட வேண்டும் என்று பெற்றோர்களும், உறவினர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தினர்.

மூளைவளர்ச்சி' இல்லாத காங்கிரஸ்... குஷ்புவுக்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு கண்டனம்!! மூளைவளர்ச்சி' இல்லாத காங்கிரஸ்... குஷ்புவுக்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு கண்டனம்!!

இதனையடுத்து பேட்டியளித்த அமைச்சர் சி.வி சண்முகம் சிறுமிக்கு நீதி கிடைக்க அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்யும் என உறுதியளித்தார். அதன்படி தற்போது, திண்டுக்கல் சிறுமி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது.

English summary
The Tamil Nadu government has appealed to the Madurai branch of the High Court against the release of the person arrested in the Dindigul girl rape and murder case. The Tamil Nadu government has appealed after parents and relatives demanded that the killer be sentenced to death or life imprisonment without escaping the law.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X