மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வைகை ஆற்றுப் பாலத்துக்கு காவி கலரா.. என்ன ஆட்சி நடக்குது இங்கே.. திமுக எம்எல்ஏ ஆவேசம்!

மதுரை ஆற்றுப்பாலத்துக்கு காவி நிறம் அடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

மதுரை: வைகை ஆற்று பாலத்துக்கு காவி நிறம் அடிக்கப்பட்டுள்ளதாம். இதுதான் தற்போது ஹாட் டாபிக்-ஆக எழுந்திருக்கிறது.

தமிழக ஆறுகளிலேயே ரொம்ப வித்தியாசமானதுதான் வைகை. இங்க எப்போ வெள்ளம் வரும் என்றே தெரியாது. மாநிலமெங்கும் ஆறுகள் நிறைந்து வழிந்தோடினாலும் வைகை அமைதி இருக்கும். நிறைய சமயத்துல வறண்டுதான் காணப்படும். எப்பவாச்சும் வைகையில தண்ணி ஓடுச்சுன்னா அப்பதான் மதுரைக்கு கொண்டாட்டமே!

DMK MLA Thiyagarajan tweet about Madurai Vaigai dam

இப்போ விஷயம் வைகையில தண்ணி ஓடுதா? இல்லையான்றதை பத்தி இல்லை. இவ்ளோ புகழ்மிக்க வைகை ஆற்று பாலம், கொஞ்ச நாளா வேற கலர்-ல காணப்படுகிறதாம். அதான்.. காவி நிறம்!

இதை போட்டோவாக எடுத்து போட்டுள்ளார் மதுரை எம்எல்ஏ டாக்டர் பி.தியாகராஜன். தனது ட்விட்டரில், "பாரம்பரியமிக்க மதுரை A.V மேம்பாலத்திற்கு இந்த வண்ணத்தை அடிப்பது எப்படி சரியாகும்? இங்கு யார் ஆட்சி நடக்கிறது? அண்ணா, திராவிடம் என்று கட்சிக்கு பெயர் வைத்துக்கொண்டு கொஞ்சமும் சுயமரியாதையற்ற வகையில் செயல்பட்டால் மக்கள் இவர்களை 'அடிமை, டயர்நக்கி' என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

வைகை ஆற்றைகூட விட்டு வைக்கவில்லையா என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்தாலும், அந்த பாலத்தில் பச்சை, வெள்ளை நிறங்களும் சேர்ந்து ஒரு தேசிய நிறம் காணப்படுவதும் உண்மைதான்!

English summary
Madurai DMK MLA Thiyagarajan tweet about Vaigai Dam is in Saffaron Colour
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X