பயம் உங்க பயோடேட்டாவுலயே இல்லையா.. பார்த்தாலே தெரியுது.. எதிர் சேவலை இறக்கிய பாஜக.. போஸ்டர் யுத்தம்!
மதுரை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தை மையமாக வைத்து மதுரையில் திமுக - பாஜகவினர் இடையே போஸ்டர் யுத்தம் வெடித்துள்ளது. "பயம் எங்க பயோ டேட்டாலயே கிடையாது" என திமுகவினர் ஒட்டிய போஸ்டருக்கு எதிர் சேவலை களமிறக்கியுள்ளனர் மதுரை பாஜகவினர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ளார். திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் கண்டித்துள்ளனர். அதே நேரத்தில் செந்தில் பாலாஜி கைதை அதிமுக மற்றும் பாஜக வரவேற்றுள்ளது.

செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தும், பாஜகவை கடுமையாக எச்சரித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதற்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பதிலடியாக ஒரு வீடியோவில் பேசி நேற்று வெளியிட்டார்.
மறுபக்கம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார், மிரட்டுவது ஒரு முதல்வருக்கு அழகா? பாஜகவினர் மீது கை வைக்கட்டும் பார்க்கலாம். நிலைமை கைமீறினால் கோட்டையை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.
செந்தில் பாலாஜி கைது விவகாரத்தால் தமிழ்நாட்டில் திமுக - பாஜக - அதிமுக என மோதல் சூழல் உருவாகியுள்ளது. பாஜக அதிமுகவினரும், திமுகவினரும் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, இருவேறு விவகாரங்களில் பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா மற்றும் அதிமுக நிர்வாகி கௌதம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரையில் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்து திமுகவினரும், திமுகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவினரும் மதுரையில் போஸ்டர் யுத்தத்தை தொடங்கியுள்ளனர். போஸ்டர், பேனர் சண்டைகளுக்கு பெயர் போன மதுரையில் திமுக - பாஜக இடையேயான இந்த போஸ்டர் யுத்தம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
திருப்பரங்குன்றம் பகுதியில் திமுகவினர், "மத்திய அரசே.. உங்க மிரட்டலுக்கு திமுக எப்போதும் அஞ்சாது, நாங்க மிசாவையே பார்த்தவங்க; பயம் எங்க பயோ டேட்டாவிலேயே கிடையாது' என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினரின் போஸ்டர்களுக்கு பக்கத்திலேயே, 'சிறைபட்டது அணில்.. அடடே ஆச்சரியக்குறி, திராவிட மாடலே! நீங்க மிசாவை தானே பார்த்தீங்க.. அமித்ஷாவை பார்த்ததில்லையே? பயம் உங்க பயோடேட்டாலயே இல்ல.. பார்த்தாலே தெரியுதுல' என்கிற வாசகங்களுடன், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது நெஞ்சு வலியுடன் கதறிய புகைப்படத்துடன் பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை முன்வைத்து, திமுக - பாஜக இடையே கருத்துப் போர் நடந்து வரும் நிலையில் இந்த போஸ்டர் யுத்தத்தால் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications