மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நோட் பண்ணிக்குங்க.. இதுதான் நடக்க போகுது".. திமுக பற்றி பரபரப்பு தகவலை வெளியிட்ட மாஜி அமைச்சர்

அதிமுக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

மதுரை: அதிமுக ஆட்சி காலத்தில் கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி காட்டியுள்ளோம். இதையெல்லாம் வரும் உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் நினைச்சு பார்க்கணும்.. இந்த தேர்தலில் திமுகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது" என்று மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, நெல்லை, விழுப்புரம், வேலூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து நேற்றுடன் முடிந்தும்விட்டது.. இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.

திமுகவுக்கு செம சான்ஸ்?.. இடியாப்ப சிக்கலில் அதிமுக?.. என்ன நடக்கிறது கூட்டணியில்.. தேர்தல் பரபரப்புதிமுகவுக்கு செம சான்ஸ்?.. இடியாப்ப சிக்கலில் அதிமுக?.. என்ன நடக்கிறது கூட்டணியில்.. தேர்தல் பரபரப்பு

போட்டி

போட்டி

இந்த தேர்தலை தமிழக அரசியல் கட்சிகள் ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளன.. அதிமுக - பாஜக போட்டியிடும் இடங்கள் தொடர்பாக இழுபறி நீடித்து வந்தது.. ஆனால், தங்களுக்கு வலுவான இடங்களை எடுத்து கொண்டு, மற்ற இடங்களை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது.. இதனிடையே வேட்பாளர் லிஸ்ட்டையும் அதிமுக வெளியிட்டுவிட்டது... பிரச்சாரத்தையும் அதிமுக தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

 பிரச்சாரம்

பிரச்சாரம்

அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள 16வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் தமிழழகனை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்பி உதயகுமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்... அப்போது அவர் பேசியபோது சொன்னதாவது:

வாக்குறுதிகள்

வாக்குறுதிகள்

"கடந்த 5 வருட அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்களை நான் நிறைவேற்றி தந்துள்ளேன்.. அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. ஆனால் இப்போதுள்ள திமுக அரசோ, எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை... இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை என்றார்களே? தந்தார்களா? வழங்கப்படவேயில்லை...

திணறல்

திணறல்

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்றார்களே? தந்தார்களா? கொடுக்கப்படவேயில்லை.. தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட நீட் தேர்வும் ரத்து என்றார்களே? செய்தார்களா? செய்யப்படவேயில்லை... இப்படி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு திணறி கொண்டிருக்கிறது.. ஆனால் நாங்க அப்படி இல்லை..

 டெபாசிட்

டெபாசிட்

அதிமுக ஆட்சி காலத்தில் தந்த எல்லா வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டன.. அதுமட்டுமல்ல, கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி காட்டியுள்ளோம். இதையெல்லாம் வரும் உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் நினைச்சு பார்க்கணும்.. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்காது.. நீங்க வேணும்னா பாருங்க" என்றார் ஆர்பி உதயகுமார்.

English summary
DMK will defeat in Local body elections says, Ex Minister RB Udhayakumar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X