மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரை குலுங்க குலுங்க.. ஒரு அலப்பறைய பாருங்க.. வைரலாகும் வீடியோ

Google Oneindia Tamil News

மதுரை: வேர்க்கடலை, சிப்ஸ், சிக்கன் 65.. அதுவும் இல்லாவிட்டால் ஊறுகாய்.. இப்படி குடி மகன்கள் சைடிஷ் பல வகைப்படும். ஆனால் மதுரையில் ஒரு குடிமகன் செய்த அலப்பறை வேற லெவல்.

மதுரை செல்லூர் பகுதியில் நேற்று, ஒரு வாலிபர் நல்ல மூக்கு முட்ட குடித்துவிட்டு, மதுபோதையில் சைக்கள் ஓட்டி வந்துள்ளார்.

ஆனால் போதை உச்சிக்கு ஏறிப்போனது போல. திடீரென, சாலையில் சைக்கிளோடு கீழே விழுந்து ஆரவாரம் செய்யத் தொடங்கினார். ஒரே திட்டு.. ஏச்சு, பேச்சு என பார்ப்போரை கடுப்பாக்கினார் குடிமகன்.

வேர்க்கடலை மாதிரி

வேர்க்கடலை மாதிரி

இதன்பிறகு, சைக்கிளின் மேலே ஏறி படுத்தபடி கீழே கிடந்த மண்ணை ரசித்து ருசித்து சாப்பாடு போல சாப்பிட்டார். இதன் பிறகு மணலை வேர்க்கடலை என ஃபிக்ஸ் செய்துவிட்டார். வேர்க்கடலையை ஊதுவதை போல, மணலை சலித்து ஊதி ஊதி சாப்பிட ஆரம்பித்தார். இதை கண்டு சாலையில் சென்றவர்கள் தலையில் அடித்தபடியே நகர்ந்தனர்.

வீராப்பு வேற

வீராப்பு வேற

அவர் கீழே கிடந்ததை பார்த்த இளைஞர்கள் சிலர் அவருக்கு உதவினர். ஆனால் குடி மகன் ரொம்பத்தான் வீராப்பு காட்டினார். நீண்ட நேரமாக எழுந்திருக்க மறுத்து ஓவர் அலப்பறை செய்தார். அந்தப்பகுதி, இளைஞர்கள் வலுக்கட்டாயமாக அவரை எழுப்பிவிட்டு அனுப்பிவைத்தனர்.

வீடியோ காட்சி

வீடியோ காட்சி

இதனை போனில் சிலர் வீடியோ எடுத்தனர். இதை பார்த்த போதை இளைஞர் இந்த வீடியோவ பேஸ்புக், வாட்ஸ்அப்ல போட்டுவிட போறீங்களா என கூறியபடி தள்ளாடிக்கொண்டே சென்றார்.

மதுரை பேரை கெடுத்த வாலிபர்

மதுரை பேரை கெடுத்த வாலிபர்

மதுரைன்னாலே, கார சார சாப்பாடுதான் நினைவுக்கு வரும். நள்ளிரவிலும் சாப்பாடு கிடைக்கும் தூங்காத நகரம். ஆனால், போதை அதிகமாகிப்போனதால், மண்ணை எடுத்து தின்று, பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளார் இந்த போதை ஆசாமி. இப்போது இந்த வீடியோ மதுரை பக்கம் வைரலாக சுற்றி வருகிறது.

English summary
Peanuts, Chips, Chicken 65, pickles .. drinker can be of many types of side dish. But the a citizen in Madurai is of a different level.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X