மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.40 கோடி போச்சு.. அழகிரி மகன் துரை தயாநிதியின் சொத்துக்கள் அதிரடி முடக்கம்.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் சொத்துக்கள் முடக்கம்

    மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டம் கீழவளவில் உள்ள கிரானைட் மலையில் இருந்து முறைகேடாக கிரானைட் வெட்டி கடத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மீதான வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது.

    Durai Dhayanidhis Rs 40 Cr worth assets freeze by ED

    இந்த முறைகேடு காரணமாக தமிழக அரசுக்கு சுமார் 257 கோடி ரூபாய நஷ்டம் ஏற்பட்டதாக வழக்கு பதியப்பட்டு உள்ளது. மொத்தம் 5 பேர் மீது இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் முறைகேடாக வாங்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது முதல்முறையாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துரை தயாநிதி சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளது. ரூபாய் 40 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது.

    மதுரையில் உள்ள ஒரு அலுவலகம், கார்கள், ஒரு சொகுசு வீடு உள்ளிட்ட பல சொத்துக்கள் இதில் முடக்கப்பட்டுள்ளதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தனை நாட்கள் கழித்து இந்த வழக்கில் இப்படி திடீர் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Durai Dhayanidhi's Rs 40 Cr worth assets freeze by Enforcement Directorate.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X