மீனாட்சியை தரிசிக்க வந்த மூதாட்டி.. கோவிலுக்குள் மயங்கி விழுந்து மரணம்.. மதுரையில் பரபரப்பு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த வயதான பெண் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. 62 வயதான இவர் இன்று காலை 8 மணியளவில் சாமி கும்பிடுவதற்காக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அப்போது அம்மன் சன்னதி அருகே அவர் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக மரணமடைந்தார்.

முதற்கட்ட விசாரணையில் மாரடைப்பின் காரணமாகவே அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரது உடல் கோவிலில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மரண சம்பவம் நடந்து விட்டதால், ஆகம விதிகளின்படி சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடியும் எனக் கூறி கோவில் வழிபாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள பக்தர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், உள்ளே வர யாரும் அனுமதிக்கப்படவில்லை.
ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி 2019: கடன், எதிரி, நோய்கள் தீர்க்கும் நரசிம்மர் ஆலயங்கள்
சிறப்பு பூஜைகளுக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. பூஜை முடிந்த பிறகு தரிசனத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது