மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த பகீர்.. மூத்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு பதவி தர வேண்டும்.. ராஜன் செல்லப்பா சூசகம்!

நிர்வாகிகளுடன் ராஜன் செல்லப்பா திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Rajan chellappa: தன் முடிவில் இருந்து பின்வாங்கப் போவது இல்லை- ராஜன் செல்லப்பா- வீடியோ

    மதுரை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பேட்டி ஒன்றை தந்து தமிழக அரசியலை புரட்டி போட்டுள்ள ராஜன் செல்லப்பா, தனது ஆதரவாளர்களுடன் இன்று திடீர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில், மூத்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு பதவி அளிக்காவிட்டால், அது வேறுகட்சிகளுக்கு செல்லும் நிலை உருவாகும் என அதிமுக தலைமைக்கு சூசகமான கோரிக்கையை ராஜன் செல்லப்பா விடுத்ததாக சொல்லப்படுகிறது.

    இப்படியே நீடித்தால்.. இலங்கையில் இன்னொரு பிரபாகரன் உருவாகலாம்.. அதிபர் சிறிசேனா எச்சரிக்கை இப்படியே நீடித்தால்.. இலங்கையில் இன்னொரு பிரபாகரன் உருவாகலாம்.. அதிபர் சிறிசேனா எச்சரிக்கை

    மேயர் பதவி

    மேயர் பதவி

    மேலும் இவர் ஏற்கனவே மதுரையில் மேயராக இருந்ததால், தற்போது மகனின் தோல்வியை சரிக்கட்டும் விதமாக அதே பதவியை குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ராஜன் செல்லப்பா அதிமுக தலைமையிடம் கேட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்தன.

    முக்கிய ஆலோசனை

    முக்கிய ஆலோசனை

    இந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ராஜன் செல்லப்பா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். திருப்பரங்குன்றத்தில் நடந்து வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சி தேர்தல்

    குறிப்பாக கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ஒன்றிய செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஒருவேளை இது உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டமாக இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. எம்பி தேர்தலில் தோல்வியை அடுத்து, மேயர் பதவியும் கிடைக்காத பட்சத்தில், உள்ளாட்சி தேர்தலிலாவது விட்டதை பிடிக்க ராஜன் செல்லப்பா மிக தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

    முக்கியத்துவம்

    முக்கியத்துவம்

    ஒரு பக்கம் உள்ளாட்சி தேர்தல் மற்றொரு பக்கம், அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் கூட்டம் வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ராஜன் செல்லப்பாவின் இந்த ஆலோசனை கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    சலசலப்பு

    சலசலப்பு

    ராஜன் செல்லப்பா "ஒற்றை தலைமை" குறித்து அளித்த பரபரப்பு பேட்டி குறித்து, கட்சி நிர்வாகிகள் யாரும் கருத்து சொல்லக்கூடாது என அதிமுக தலைமை கட்டுப்பாடு விதித்திருந்தது. ஆனால், இதனையும் மீறி ராஜன் செல்லப்பா ஆலோசனை கூட்டத்தில் அவரது நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசித்து வருவது அதிமுகவில் பெரிய பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

     சூசக கோரிக்கை

    சூசக கோரிக்கை

    இந்த கூட்டத்தில் ராஜன் செல்லப்பா பேசியபோது, "திருப்பரங்குன்றம் தொகுதியில் கடின உழைப்பு இருந்தும் வெல்ல முடியவில்லை. நெருடல் காரணமாக தோல்வியை சந்தித்தோம். உள்ளாட்சி தேர்தலில் உழைப்பவர்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். கட்சியில் மூத்த உறுப்பினர்களுக்கு தலைமை மதிப்பு அளிக்க வேண்டும்.

     குடும்ப உறுப்பினர்

    குடும்ப உறுப்பினர்

    இது குறித்து முதல்வர் எடப்பாடி முடிவு எடுக்க வேண்டும். மூத்த உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு இடம் அளிக்காவிட்டால் வேறு கட்சிக்கோ, வேறு ரசிகர் மன்றத்திற்கோ செல்லும் நிலை உருவாகும் என சூசகமாக குடும்ப உறுப்பினருக்கு பதவி வழங்க வேண்டும் கோரிக்கையை ராஜன் செல்லப்பா முன் வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் இன்னும் சூடுபிடித்துள்ளது.

    English summary
    AIADMK MLA Rajan Chellappa Serious discussion with Executives in Thiruparankundram
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X